பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
இன்று கல்வி
வளர்ச்சி நாள்.
கர்ம வீரர்
காமராசர் பிறந்த நாள்.
தமிழ் செய்திகள்
1)
பென்சில்வேனியாவில் தேர்தல்
பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிக்
குண்டு டிரம்பின் காதில் லேசாக உரசிச் சென்றது. பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால்
சுட்ட மர்ம நபரைச் சுட்டுக் கொன்றனர்.
2)
அரசு உதவி பெறும் 3995
பள்ளிகளில் இன்று முதல் காலை உணவுத் திட்டம் தொடங்கப்படுகிறது.
3)
பஞ்சாப் மாநிலம் பாசில்கா
மாவட்டத்தில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமையன்று புத்தக பை இல்லா தினம் அமல்படுத்தப்படுகிறது.
இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
4)
இன்று நீலகிரி, கோவை,
திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5)
விக்ரவாண்டி சட்டப்பேரவை
இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா
வெற்றி பெற்றார்.
6)
சனிக்கிழமை நடைபெற்ற குரூப்
1 தேர்வை 797 மையங்களில் இரண்டு லட்சம் பேர் எழுதினர்.
7)
திருப்பத்தூர் மாவட்டம்,
நாற்றாம்பள்ளி அருகே 10000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளது.
8)
தமிழ்நாட்டுக்குத் தினமும்
8000 கனஅடி தண்ணீர் திறக்க முடிவு செய்துள்ளதாகக் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
9)
நேபாளத்தின் புதிய பிரதமராக
கே.பி.சர்மா ஒலி பதவியேற்றார்.
10)
ஜிம்பாப்வேக்கு எதிரான
டி20 கிரிக்கெட் தொடரை நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா வென்றது.
English
News
1) Trump was shot while campaigning in Pennsylvania. The
bullet lightly grazed Trump's ear. The security forces shot and killed the
suspect who opened fire.
2) Breakfast program starts from today in 3995
government aided schools.
3) Book Bag Free Day is implemented on the last Saturday
of every month in Basilka district of Punjab. It has been well received by
parents and students alike.
4) Heavy rain is likely to occur in hilly areas of
Nilgiris, Coimbatore, Tirupur, Theni and Dindigul districts today, the
Meteorological Department said.
5) DMK candidate Aniyur Siva who contested on behalf of India
alliance won the Vikravandi assembly by-election.
6) Two lakh candidates wrote the Group 1 exam held on
Saturday in 797 centres.
7) Neolithic tools dating back 10000 years have been
found near Nartampalli, Tirupattur District.
8) Government of Karnataka has announced that it has
decided to release 8000 cubic feet of water to Tamil Nadu every day.
9) KP Sharma Oli was sworn in as the new Prime Minister
of Nepal.
10) India won the T20 cricket series against Zimbabwe by
four to one.
No comments:
Post a Comment