பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
தமிழகத்தில் சென்னை, கடலூர்,
ஈரோடு, கரூர் உள்ளிட்ட பத்து இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைக் கடந்தது.
2)
தமிழகத்தில் ஆவின் பால்
தினசரி கொள்முதல் 35 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது.
3)
ஜிகா வைரஸ் பரவல் குறித்து
எச்சரிக்கையாக இருக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்துள்ளது.
4)
கீழடியில் நடைபெற்று வரும்
பத்தாம் கட்ட அகழாய்வில் செம்புப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
5)
ஓகேனக்கலுக்கு வரும் நீர்
வரத்து 3000 கன அடியாக அதிகரித்துள்ளது.
6)
புற்றுநோய்க்கான காரணிகளைக்
கொண்டிருப்பதாக பானிபூரியைத் தடை செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
7)
சூன் மாதத்தில் இந்தியாவின்
நிலக்கரி உற்பத்தி 84.63 மெட்ரிக் டன்னைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
8)
சூன் மாதத்தில் இந்திய
ரயில்வே 135.46 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
9)
வரலாற்றில் முதன் முறையாக
பம்பாய் பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 80000 புள்ளிகளைக் கடந்தது.
10)
உலகக் கோப்பையுடன் தாயகம்
திரும்பும் கிரிக்கெட் வீரர்கள் இன்று பிரதமரைச் சந்திக்கின்றனர்.
English
News
1) Ten places in Tamil Nadu including Chennai,
Cuddalore, Erode and Karur crossed 100 degrees Fahrenheit.
2) In Tamil Nadu the daily purchase of Aavin milk has
increased to 35 lakh litres.
3) The central government has warned the state
governments to be alert about the spread of the Zika virus.
4) Copper objects have been found in the tenth phase of
excavation under Keezhadi.
5) Water flow to Okanakkal increased to 3000 cubic feet.
6) Government of Karnataka has decided to ban Panipuri
as it has carcinogenic factors.
7) India's coal production in June has crossed a record
of 84.63 MT.
8) Indian Railways handled a record 135.46 million
tonnes of cargo in the month of June.
9) For the first time in history Bombay Stock Exchange
Index Sensex crossed 80000 points.
10) Cricketers returning home with World Cup meet PM
today.
No comments:
Post a Comment