பழைய குற்றவியல் சட்டங்களுக்கும் புதிய குற்றவியல் சட்டங்களுக்கும் பின்வரும் முக்கிய வேறுபாடுகள் உள்ளன.
பழைய குற்றவியல் சட்டப்படி குற்றம் நடந்த காவல் நிலையத்தில்
மட்டுமே புகார் அளிக்க முடியும். புதிய குற்றவியல் சட்டப்படி எந்தக் காவல் நிலையத்திலும்
புகார் அளிக்கலாம்.
பழைய குற்றவியல் நடைமுறைப்படி புகார்தாரருக்கு முதல் தகவல்
அறிக்கை வழங்குவது கட்டாயமில்லை. புதிய குற்றவியல் நடைமுறைப்படி முதல் தகவல் அறிக்கை
வழங்குவது கட்டாயம்.
பழைய குற்றவியல் நடைமுறைப்படி காவலர்கள் 120 நாட்கள் வரை விசாரணை
நடத்தலாம். புதிய குற்றவியல் நடைமுறைப்படி 90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்.
பழைய குற்றவியல் நடைமுறைப்படி புகார்தாரருக்கு விசாரணை விவரங்களைத்
தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. புதிய குற்றவியல் நடைமுறைப்படி விசாரணை விவரங்களைத்
தெரிவிக்க வேண்டும்.
பழைய குற்றவியல் நடைமுறைப்படி சாட்சிகள் நீதிபதி முன்பாகவோ,
காவலர்கள் முன்பாகவோ நேரில் ஆஜராக வேண்டும். புதிய நடைமுறைப்படி காணொளிக் காட்சி மூலமாக
ஆஜராகலாம்.
பழைய குற்றவியல் நடைமுறைப்படி அசல் ஆவணங்கள் மட்டுமே தாக்கல்
செய்ய வேண்டும். புதிய நடைமுறைப்படி நகல்களைத் தாக்கல் செய்யலாம்.
பழைய குற்றவியல் நடைமுறைப்படி விசாரணை, சோதனையின் போது வீடியோ
பதிவு கட்டாயமில்லை. புதிய நடைமுறைப்படி வீடியா பதிவு கட்டாயம்.
பழைய குற்றவியல் நடைமுறைப்படி கைது செய்யப்படும் நபரை 15 நாட்கள்
மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க முடியும். புதிய நடைமுறைப்படி 40 முதல் 60 நாட்கள்
விசாரிக்க முடியும்.
பழைய குற்றவியல் நடைமுறைப்படி தப்பி ஓடும் அபாயம் இருப்பவர்களுக்கு
மட்டுமே கைவிலங்கு இட வேண்டும். புதிய நடைமுறைப்படி கொலை, பாலியல் வன்கொடுமை, அரசுக்கு
எதிராகக் குற்றம் புரிந்தவர்களுக்குக் கைவிலங்கு இட வேண்டும்.
பழைய குற்றவியல் நடைமுறைப்படி சிறிய குற்றங்களாக இருந்தாலும்
சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும். புதிய நடைமுறைப்படி சிறிய குற்றங்களுக்குச் சமூகப்
பணிகளில் ஈடுபடுத்தலாம்.
*****
No comments:
Post a Comment