Tuesday 30 July 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 31.07.2024 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  ஆகஸ்ட் 14 முதல் மருத்துவ கலந்தாய்வு துவங்குகிறது.

2)                  தமிழகத்தில் டிசம்பருக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்க உள்ளன.

3)                  கேரளா, வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது.

4)                  வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தொடர்ந்து இன்றும் நாளையும் கேரளத்தில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

5)                  கேரளத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

6)                  கேரள நிலச்சரிவு நிவாரணமாகத் தமிழக அரசு சார்பில் ஐந்து கோடி வழங்கப்படுவதாகத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

7)                  ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற சாதனையைப் படைத்தார் மனு பாக்கர். ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்றனர்.

8)                  43வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

9)                  உலக நாடுகளுக்கு இந்தியா நம்பிக்கை ஒளியாகத் திகழ்வதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார். உலக முதலீடுகளின் மையமாகவும் இந்தியா திகழ்வதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

10)              திருத்தப்பட்ட BIS விதிமுறைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருதால் காலணிகளின் விலை உயர வாய்ப்புள்ளது.

11)              பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி கால் இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

 English News

1) MBBS Medical counselling starts from 14th August.

2) Arrangements are being made to hold rural local body elections in Tamil Nadu by December. Rural local body elections are scheduled to be held on December 27 and 30.

3) More than a hundred people have been killed in landslides caused by heavy rains in Wayanad, Kerala. The death toll has risen to 135.

4) Mourning is observed in Kerala today and tomorrow following the loss of lives in the Wayanad landslides.

5) Landslides have also occurred in Karnataka after Kerala. The National Disaster Response Force has rushed there.

6) The Chief Minister of Tamil Nadu has announced that five crores will be provided by the Government of Tamil Nadu as Kerala landslide relief.

7) Manu Bakar holds the record of winning two medals in a single Olympics. Manu Bakar and Sarabjot Singh won bronze in air pistol mixed team category.

8) For the 43rd time Mettur Dam reached its full capacity of 120 feet.

9) The Prime Minister proudly expressed that India is a beacon of hope for the world. The Prime Minister said that India is also the center of global investments.

10) Prices of footwear are likely to rise as revised BIS norms come into effect from 1st August.

11) The Indian hockey team has qualified for the quarter-finals of the ongoing Olympics in Paris.

No comments:

Post a Comment