பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
இன்று பாரிஸில் 33வது
ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்குகின்றன. இந்தியா சார்பில் 16 போட்டிகளில்
117 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
2)
இன்று தொடங்கும் ஒலிம்பிக்
போட்டிகள் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகின்றன.
3)
ஒலிம்பிக் போட்டியில்
206 நாடுகளைச் சேர்ந்த 10741 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
4)
தொடர்ந்து அதிகரித்து
வரும் நீர்வரத்தைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியைக் கடந்தது.
5)
கர்நாடாகவில் பெய்து வரும்
கன மழையால் காவிரியில் திறக்கப்படும் திறக்கப்படும் தண்ணீர் ஒரு லட்சம் கன அடியைக்
கடந்தது.
6)
நடப்பு கல்வியாண்டில்
அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்காக
360 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
7)
கனிம வளங்களுக்கு வரி
விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் இருப்பதாக உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
8)
நீட் தேர்வுக்கு எதிராகக்
கர்நாடக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
9)
நீட் தேர்வு முறைகேடு
தொடர்பாக இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10)
பரந்தூர் விமான நிலைய
கட்டுமானம் 2026 ஜனவரியில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English
News
1) The 33rd Olympic Games kicks off with a bang today in
Paris. 117 athletes will participate in 16 events on behalf of India.
2) The Olympic Games, which begin today, will continue
till August 11.
3) 10741 athletes from 206 countries participate in the
Olympic Games.
4) Mettur Dam's water level has crossed 90 feet due to
continuously increasing water flow.
5) Due to heavy rains in Karnataka, the release of water
in Cauvery crossed one lakh cubic feet.
6) An ordinance has been issued to allocate 360 crore rupees for the
Tamil Puthalavan scheme for the students studying in government schools and
pursuing higher education in the current academic year.
7) The Supreme Court has ruled that the state governments
have the power to levy taxes on mineral resources.
8) Resolution passed in Karnataka Legislature against
NEET exam.
9) So far 36 people have been arrested in connection
with NEET examination malpractice.
10) It is reported that the construction of Parantur
Airport will start in January 2026.
No comments:
Post a Comment