Friday, 5 July 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 06.07.2024 (சனி)

இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  தென்கொரியாவின் அரசு அலுவலகத்தில் பணியாற்றிய ரோபோ ஒன்று பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டது. பணிச்சுமையின் காரணமாக அங்கும் இங்கும் அலைந்த அந்த ரோபோ மாடிகளுக்கு இடையில் உள்ள படிக்கட்டில் விழுந்து செயலிழந்தது. 2023 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த இந்த ரோபோ காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பணியாற்றியது. கோப்புகளைக் கொண்டு செல்வது, மக்களுக்கு வழிகாட்டுவது இதன் பணியாகும். தென்கொரியாவில் 10 ஊழியர்களுக்கு ஒரு ரோபோ என்கிற விகிதத்தில் ரோபோக்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

2)                  இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியின் கியர் ஸ்டார்மர் இங்கிலாந்தின் பிரதமராகப் பதவியேற்றார்.

3)                  இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் உமா குமரன் முதல் இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார். அவருக்குத் தமிழக முதல்வர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

4)                  இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு 28 இந்திய வம்சாவளியினர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வாகியுள்ளனர்.

5)                  ஒரு மாதத்திற்கு முன்பு 71000 டாலராக இருந்த பிட்காயினின் மதிப்பு தற்போது 54000 டாலராகக் குறைந்துள்ளது.

6)                  சமையல் உபகரணங்கள் மீது ஐ.எஸ்.ஐ. முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

7)                  அசாமில் தீவிரமாகும் கனமழையால் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 English News

1) A robot working in a South Korean government office committed suicide due to workload. Due to the workload, the robot wandered here and there and fell on the stairs between the floors and became disabled. The robot, which entered service in 2023, worked from 9 am to 6 pm. Its job is to transport files and guide people. It is noteworthy that in South Korea there is one robot for every 10 employees.

2) The Labor Party came to power after 14 years in the UK parliamentary elections. The party's Kier Starmer was sworn in as Prime Minister of England.

3) Uma Kumaran has been elected as the first Srilankan-Tamil Member of Parliament in the UK parliamentary elections. Tamil Nadu Chief Minister congratulated him.

4) A record 28 people of Indian origin have been elected as members of parliament in UK parliamentary elections.

5) Bitcoin's value has dropped to $54000 from $71000 in a month.

6). The central government has announced that ISI on cooking appliances is mandatory.

7) 24 lakh people affected by severe and heavy rains in Assam.

No comments:

Post a Comment