Tuesday 2 July 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 03.07.2024 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  உத்தர பிரதேசத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

2)                  அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து சூலை 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

3)                  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 25 மீனவர்களை விடுவிக்க முதல்வர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

4)                  தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூறு சட்டப் புத்தகங்களை முதல்வர் வெளியிட்டார்.

5)                  தமிழகத்தில் இன்று முதல் எட்டாம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6)                  கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆறரை லட்சம் மக்கள் அசாம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7)                  விளையாட்டு தொழில்நுட்பத்துக்கான ஸ்டார்ட் அப் மாநாடு சூலை 12 இல் நடக்க உள்ளது. இதை சென்னை ஐஐடி நடத்துவது குறிப்பிடத்தக்கது.

8)                  பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 179 பேர் பலியாகியுள்ளனர்.

9)                  பதினைந்து நிமிடங்களில் கடன் பெறும் சகாஜ் என்ற திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

10)              டி20 உலகக் கோப்பையில் வென்ற இந்திய அணிக்கு இந்தியக் கிரிக்கெட் வாரியம் 125 கோடி பரிசுத் தொகை வழங்கியுள்ளது.

 English News

1) More than a hundred people were killed in a stampede at a spiritual discourse in Uttar Pradesh.

2) Opportunity to re-apply in Govt Arts and Science Colleges is given. You can apply from today till 5th July.

3) The Chief Minister has written to the central government to release 25 fishermen arrested by the Sri Lanka Navy.

4) CM released hundred law books translated into Tamil.

5) The Meteorological Department has informed that there is a possibility of rain in Tamil Nadu from today till the 8th.

6) Six and a half lakh people have been affected in the state of Assam due to floods caused by heavy rains.

7) Game Technology Startup Conference to be held on July 12. It is noteworthy that this is conducted by IIT Chennai.

8) Floods and landslides in Brazil killed 179 people.

9) State Bank of India has introduced a scheme called Sakhaj to get loan in fifteen minutes.

10) The Indian Cricket Council has given 125 crore prize money to the Indian team who won the T20 World Cup.

No comments:

Post a Comment