Tuesday, 8 October 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 09.10.2024 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) ‘நிமெசுலைட்’ எனும் வலி நிவாரணி மருந்தை 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்குப் பரிந்துரைக்கவோ, விற்பதோ கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது.

2) மைக்ரோ ஆர்.என்.ஏ. கண்டுபிடிப்பிற்காக அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் ஆம்புரோஸ் மற்றும் கேரி ருவ்குனுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

3) ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி இணைந்து ஆட்சி அமைக்க உள்ளன. உமர் அப்துல்லா முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4) ஹரியானாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. மீண்டும் நயாப்சிங் சைனி அங்கு முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

5) வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 17 இல் துவங்கும் என எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6) அக்டோபர் 15 முதல் தமிழகத்தில் 1000 மழைக்கால முன்னெச்சரிக்கை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியின் தெரிவித்துள்ளார்.

7) 38000 கோடியில் 14 முதலீட்டுத் திட்டங்களுக்கு முதல்வர் தலைமையிலான தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

8) அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது.

9) மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. அமைப்பு விருது வழங்கியுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

10) மாலத்தீவுக்கு முதலில் உதவும் நாடாக இந்தியா இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபரிடம் தெரிவித்துள்ளார்.

11) 16800 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே உணவு வழித்தடம் உருவாக்கப்பட உள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

12) விண்வெளி நிலையம் அமைப்பதற்கான புதிய ஏவுகலன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.

13) வெள்ளி கோள் குறித்து ஆய்வு செய்ய 19 கருவிகளுடன் விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

English News

1) The central government has banned the sale or prescription of the pain reliever Nimesulide to minors below 12 years of age.

2) The Nobel Prize in Medicine for 2024 has been awarded to US-based Victor Ambrose and Gary Ruvgun for the discovery of Micro RNA.

3) Congress and National Conference will form government together in Jammu and Kashmir elections. Omar Abdullah is expected to be the Chief Minister.

4) Bharatiya Janata Party is going to form the government after winning for the third time in a row in Haryana. Nayab Singh Saini is expected to be the chief minister again.

5) The Meteorological Department has said that the Northeast Monsoon is expected to begin on October 17.

6) Health Minister M. Subramanian has said that 1000 monsoon preventive medical camps will be conducted in Tamil Nadu from October 15.

7) The Tamil Nadu Cabinet headed by the Chief Minister has approved 14 investment projects worth Rs 38,000 crore.

8) A new storm symbol is forming in the Arabian Sea today.

9) The Tamil Nadu Health Department has informed that the United Nations Organization has given the award to ‘Makkalai Thedi Maruthuvam’ Scheme.

10) Prime Minister Narendra Modi told the President of Maldives that India will be the first country to help Maldives.

11) Union Commerce Minister Piyush Goyal has said that a food corridor is going to be created between India and the United Arab Emirates with an investment of 16800 crore rupees.

12) ISRO chief Somanath said that a new launch vehicle for setting up the space station will be introduced soon.

13) ISRO plans to send a spacecraft with 19 instruments to study Venus.

No comments:

Post a Comment