இன்றைய தமிழ் & ஆங்கிலச்
செய்திகள் – 30.10.2024 (புதன்)
பள்ளி காலை
வழிபாட்டு நிகழ்வுக்கான
தமிழ் மற்றும்
ஆங்கிலச் செய்திகள்!
தமிழ்ச் செய்திகள்
1) நிகழ் கல்வியாண்டில்
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள் மற்றும்
ஆய்வகங்கள் போன்ற உள்கட்டமைப்புப் பணிகளுக்காக 745 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
2) தமிழகத்தில் ஆறு கோடியே
இருபத்து ஏழு லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள்
அதிகம் உள்ளனர். சோழிங்கநல்லூர் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகவும் கீழ்வேளூர்
குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகவும் உள்ளன.
3) குஜராத்தில் டாடா விமான ஆலையைப் பிரதமர் நரேந்திர
மோடி ஸ்பெயின் பிரதமருடன் அதிபருடன் இணைந்து தொடங்கி வைத்தார். இந்த ஆலையின் முதல்
விமானம் 2026 இல் தயாராகும்.
4) தமிழகத்தில் உள்ள ஐடிஐக்களில் நேரடிச் சேர்க்கைக்கான
கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
5) பருகால மாற்றத்தின் காரணமாகத் தமிழகத்தில்
குழந்தைகளுக்குப் பொன்னுக்கு வீங்கி அதிகரித்து வருவதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
6) அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்கள் தொகைக்
கணக்கெடுப்பு பணிகள் துவங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
7) கற்றல் குறைபாடான டிஸ்லெக்சியா குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற கட்டடம், இந்தியா கேட்
பகுதி ஆகியன இரவு நேரத்தில் சிவப்பு நிறத்தில் ஒளிரச் செய்யப்பட்டன.
English News
1) 745 crore for infrastructure works
like classrooms and laboratories in Government High School and Higher Secondary
Schools in Tamil Nadu during the current academic year.
2) There are six crore twenty seven
lakh voters in Tamil Nadu. There are more female voters than male voters. Chozhinganallur
is the most electorate constituency and Killvelur is the least electorate
constituency.
3) Prime Minister Narendra Modi
inaugurates Tata Aircraft Plant in Gujarat along with Prime Minister of Spain.
The plant's first flight will be ready in 2026.
4) The period for direct admission to
ITIs in Tamil Nadu ends today.
5) According to the health
department, swelling in children is increasing in Tamil Nadu due to seasonal
change.
6) Central government sources have
informed that the census work will start early next year.
7) The President's House, Parliament
House and India Gate area were illuminated in red at night to raise awareness
about Dyslexia, a learning disability.
No comments:
Post a Comment