Monday, 14 October 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 15.10.2024 (செவ்வாய்)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 15.10.2024 (செவ்வாய்)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1)   மார்ச் 28 லிருந்து ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.

2)   மார்ச் 3 லிருந்து மார்ச் 25 ஆம் தேதி வரை பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.

3)   பள்ளி, கல்லூரிகளுக்குக் கனமழை குறித்த விடுமுறை அறிவிப்புகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுப்பார்கள் எனப் பள்ளக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

4)   இன்றிலிருந்து வடகிழக்குப் பருவமழை தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5)   வங்கக் கடலில் புயல் சின்னம் உருவானது. தமிழகத்தில் மூன்று நாட்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

6)   நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

7)   இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

8)   கனமழையை எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் மேலாண்மை NDRF மீட்புக் குழு சென்னையை வந்தடைந்தது.

9)   ஒகேனக்கலுக்கு வரும் நீர் வரத்து இருபதாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

10) சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற பாராம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அக்டோபர் 17 இல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

11) காஷ்மீரில் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்க வசதியாக ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்படுகிறது.

12) மழையால் காய்கறிகளின் வரத்துக் குறைந்ததால் கோயம்பேடு காய்கறிச் சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

English News

1) Class 10 general exams are going to be held from March 28 to April 15.

2) Class 12th general exams are going to be held from 3rd March to 25th March.

3) Education Minister Anbil Mahesh Poiyamozhi has said that the respective District Collectors will take a decision regarding the holiday announcements for schools and colleges due to heavy rains.

4) The Meteorological Department has informed that Northeast Monsoon will start from today.

5) A storm symbol formed in the Bay of Bengal. A heavy rain warning has been issued in Tamil Nadu for three days.

6) Meteorological department has issued red alert for Chennai, Kanchipuram, Tiruvallur, Chengalpattu districts tomorrow.

7) Schools and colleges in Chennai, Kanchipuram, Thiruvallur, Chengalpattu district have been declared holiday today due to heavy rain.

8) Disaster Management NDRF rescue team reached Chennai to face heavy rains.

9) Water flow to Okanakkal increased to twenty thousand cubic feet.

10) Rank order list for traditional medicine courses like Siddha, Unani, Ayurveda, Homeopathy published. The counselling will be held on October 17.

11) President's rule is abolished to make way for Omar Abdullah to take office as the new Chief Minister of Kashmir.

12) The price of vegetables has increased in the Koyambedu vegetable market due to reduced supply of vegetables due to rain.

No comments:

Post a Comment