Sunday 13 October 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 14.10.2024 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)      தமிழகத்தில் பள்ளிகளின் வேலை நாட்களை 210 நாட்களாகத் திருத்தம் செய்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

2)      சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3)      திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்கு 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

4)      நேற்று மதுரை மற்றம் கோவை மற்றும் அதனை ஒட்டிய சுற்றுப்புறங்களில் கனமழை பொழிந்து பல பகுதிகள் வெள்ளக்காடாக ஆனது.

5)      திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரப்பேட்டையில் நின்ற கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணியர் ரயில் மோதிய விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

6)      தேச நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

7)      தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிந்த உடன் நவம்பர் 10 இல் சஞ்சீவ் கண்ணா புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்கிறார்.

8)      சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வடகிழக்குப் பருவமழைக்கான கட்டுப்பாட்டு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

9)      உலகப் பட்டினிக் குறியீட்டில் 105வது இடத்தில் இந்தியா உள்ளது.

10)  டெஸ்லா நிறுவனம் விருந்தினர்களை உபசரிக்கும் மனித ரோபோக்களை அறிமுகம் செய்துள்ளது.

11)  இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை முந்தி கௌதம் அதானி முதலிடம் பிடித்தார்.

English News

1) Department of School Education has announced to revise the working days of schools to 210 days in Tamil Nadu.

2) Chennai is likely to experience heavy rain today, the Meteorological Department has said.

3) The Meteorological Department has announced that Tiruvallur and Kanchipuram districts will receive more than 20 cm of rain for two days.

4) Heavy rain fell in Madurai, Coimbatore and surrounding areas yesterday and many areas became flooded.

5) A high-level inquiry has been ordered into the accident in which a passenger train collided with a freight train standing at Kavarappettai near Kummidipoondi in Tiruvallur district.

6) Defense Minister Rajnath Singh has said that strict action will be taken if there is a threat to the national interest.

7) Sanjeev Khanna will be sworn in as the new Chief Justice on November 10 after the tenure of Chandrachud, the current Chief Justice of the Supreme Court, ends.

8) Deputy Chief Minister Udayanidhi Stalin inspected the Northeast Monsoon Control Center set up in Chennai.

9) India ranks 105th on the World Hunger Index.

10) Tesla has introduced humanoid robots to entertain guests.

11) Gautam Adhani overtakes Mukesh Ambani to become the top Indian richest man.

No comments:

Post a Comment