இன்றைய தமிழ் & ஆங்கிலச்
செய்திகள் – 16.10.2024 (புதன்)
பள்ளி காலை
வழிபாட்டு நிகழ்வுக்கான
தமிழ் மற்றும்
ஆங்கிலச் செய்திகள்!
தமிழ்ச் செய்திகள்
1) பள்ளிகளில் திருக்குறள்
நன்னெறி நிகழ்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
2) வங்கக் கடலில்
நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாகச் சென்னை அருகே 17 ஆம் தேதி கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
3) வங்கக் கடலின் புயல்
சின்னத்தைத் தொடர்ந்து 16 வட மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
கொடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
4) தமிழகம் மற்றும்
புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம்
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
5) சென்னையில் மழை
படிப்படியாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் அனைத்து
சுரங்கப் பாதைகளும் சென்னையில் மூடப்பட்டுள்ளன.
6) சென்னையில் கனமழை
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கார் வைத்துள்ளவர்கள் போலீசாரின் அபராதத்தையும்
பொருட்படுத்தாது மேம்பாலத்தில் நிறுத்தி வருகின்றனர்.
7) சென்னையில் 13 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
8) புளியந்தோப்பு பகுதியில்
கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் ஆய்வு செய்தார்.
9) தொடர் மழையின் எதிரொலியில்
காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. தக்காளி மற்றும் அவரையின் விலை 100 ரூபாயைத் தாண்டியும் பீன்ஸின் விலை 200 ரூபாயைத்
தாண்டியும் விற்கப்படுகின்றன.
10) ஜம்மு காஷ்மீரின் முதல்வராக
உமர் அப்துல்லா இன்று பதவி ஏற்கிறார்.
English News
1) The Directorate of School
Education has ordered to conduct Thirukkural ethics events in schools.
2) The low pressure area over the Bay
of Bengal is likely to cross the coast near Chennai on 17th, the Meteorological
Department said.
3) The Meteorological Department has
issued a red alert for 16 northern districts following the storm symbol of the
Bay of Bengal.
4) The Meteorological Department has
officially announced the onset of Northeast Monsoon in Tamil Nadu and
Puducherry.
5) All tunnels have been closed in
Chennai as the Meteorological Department has warned of gradual increase in
rainfall.
6) As a precautionary measure for
heavy rains in Chennai, people who have kept their cars are parking on the
flyover despite the police fine.
7) 13 National Disaster Relief Force
teams have been kept ready in Chennai.
8) The Chief Minister reviewed the
precautionary measures for heavy rains in the Puliyanthoppu area.
9) Prices of vegetables have
increased in response to continuous rains. Tomatoes are sold at over Rs 100 and
beans at over Rs 200.
10) Omar Abdullah takes office as Chief Minister of Jammu and Kashmir today.
No comments:
Post a Comment