Sunday 6 October 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 07.10.2024 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)      அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் தலைமைப் பண்பை மேம்படுத்த ‘மகிழ் முற்றம்’ எனும் மாணவர் அமைப்பு தொடங்கப்பட உள்ளது.

2)      அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3)      பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைர விழா ஜனவரி 2025 இல் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெற உள்ளது.

4)      வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

5)      அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. www.iogkgh.org.in என்பதே அதற்கான இணையதளம் ஆகும்.

6)      பேறுகால இறப்பு இல்லாத நிலையை உருவாக்க தமிழக அரசு 4 புதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

7)      ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

8)      சென்னை மேட்ரோ ரயிலுக்கான இரண்டாம் கட்ட பணிக்கான நிதியில் 65 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

9)      இந்தியாவில் பிஎம்டபுள்யூ காரின் விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

10)  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோனை இம்மாத வெளியிட உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

English News

1) To improve the leadership qualities of the students in all the government schools, a student organization called 'Magil Mutram' is to be started.

2) North East Monsoon will start after October 15, Meteorological Department said.

3) The Diamond Jubilee of Bharat Sarana Saranya Movement is scheduled to be held in Manpaarai, Trichy District in January 2025.

4) Deputy Chief Minister Udhayanidhi Stalin has ordered that North East Monsoon precautionary measures be taken on a war-time basis.

5) Website launched for Govt Maternal Health Hospitals. Its website is www.iogkgh.org.in.

6) Government of Tamil Nadu has launched 4 new schemes to create zero maternal mortality.

7) Haryana assembly polls will be counted tomorrow.

8) The Ministry of Finance has informed that the central government will provide 65 percent of the funds for the second phase of the Chennai Metro Rail.

9) Sales of BMW cars in India increased by 10 percent.

10) Apple to launch India-made iPhone this month.

No comments:

Post a Comment