Wednesday, 16 October 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 17.10.2024 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)  மழை விடுமுறை நாட்களில் இணைய வழி வகுப்புகளை நடத்தக் கூடாது எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

2)  செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் நெறிமுறைகள் அவசியம் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

3) மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

4)  சென்னையில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் மழையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

5)  சோழவரத்தில் அதிகபட்சமாக 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

6)  மழை வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் உடனடியாக நிவாரண முகாம்களை அமைத்து பொதுமக்களின் துயர் துடைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

7)  மகாராஷ்டிரத்தில் நவம்பர் 20 இல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

8)  ஜார்கண்டில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

9)  கேரளாவின் வயநாடு தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13 இல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

10) தமிழக அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்த சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

11)  ஆசியாவின் ஆற்றமிகு பெண்ணாக பிரித்தி ரெட்டியைப் பார்ச்சூன் இதழ் தேர்வு செய்துள்ளது. இவர் அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவர் ஆவார்.

12)  வியாழன் கிரகத்து நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது நாசா.

English News

1) School Education Minister Anbil Mahesh Poiyamozhi has announced that online classes should not be held during monsoon holidays.

2) Prime Minister Narendra Modi has said that ethics are necessary in the use of artificial intelligence.

3) The Union Cabinet has approved a 3 percent increase in dearness allowance for Central Government employees.

4) The normal life of the people has been affected by the heavy rains in Chennai. However, the impact of rain is gradually decreasing.

5) Maximum 30 cm rain is reported in Cholavaram.

6) The Chief Minister has directed the District Collectors to immediately set up relief camps in the flood-affected areas to alleviate the suffering of the public.

7) The Election Commission has announced that the Legislative Assembly elections will be held in Maharashtra on November 20.

8) The Election Commission has announced that Jharkhand assembly elections will be held in two phases on November 13 and 20.

9) The Election Commission has announced that Kerala's Wayanad by-election will be held on November 13.

10) The strike of Samsung workers ended after the agreement was reached in the talks held by Tamil Nadu Ministers.

11) Prithi Reddy has been selected as Asia's Most Powerful Woman by Fortune magazine. She is the Vice Chairman of Apollo Medical Group.

12) NASA sent spacecraft to Jupiter's moon.

No comments:

Post a Comment