நல்ல சிந்தனைகள் நான்கு!
1) உன்னால்
முடியாது என்று நீ சொல்வதை வேறு யாரோ ஒருவர் செய்து கொண்டிருக்கிறார். இந்த உலகில்
ஒருவரால் முடிவது உன்னால் ஏன் முடியாது? காற்றே சிமினியாக மாறி தீபத்தைக் காக்கும்
போது அந்த ஒளியை யாரால் அழிக்க முடியும்?
2) எல்லா
மாற்றங்களும் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும், குறிப்பாகத் துவக்கத்தில். ஆகவே
எல்லா மாற்றங்களும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். எதிர்ப்பை
எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருங்கள்.
3) எல்லாரும்
கார் வாங்குவது முக்கியமில்லை. அதற்கான சாலை வசதிகளைச் செய்து கொடுக்க முடியுமா என்பதுதான்
முக்கியம். ஏழைகளும் கார் வைத்திருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. பணக்காரர்களும்
பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்களா என்பதுதான் முக்கியம்.
4) எப்போதும்
பலவீனம்தான் காரணம் தேடும். வலுத்ததற்குக் காரணம் தேவையில்லை. அது எப்படியும் ஜெயித்து
விடும். அதற்கு நீங்கள் உங்களுக்கு நீங்களே வலிமை ஏற்றிக் கொள்ளுங்கள்.
*****
No comments:
Post a Comment