Sunday 27 October 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 28.10.2024 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) உயர்கல்வி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவில் உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் வழியாக சனிக்கிழமைகளில் பயிற்சிகள் வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

2) தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் போட்டிகளை அறிவித்துள்ளது. மேலதிக தகவல்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கித் தகவல்களை அறியவும்.

https://cict.in/cict2023/wp-content/uploads/2024/10/CICT-_Essay_and_poetry_competition.pdf

3) பழங்குடியினர்களின் பங்கேற்பின்றி நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

4) எல்லையிலிருந்து இந்திய மற்றும் சீனப் படைகளைப் படிப்படியாக இரு நாடுகளும் விலக்கி வருகின்றன.

5) இந்தியப் பணியாளர்களுக்கு நான்கு மடங்கு விசாக்களை அதிகரிக்க உள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.

6) ஈரான் மீது நேரடி யுத்தத்தைத் தொடங்கியது இஸ்ரேல். ஈரானின் 20க்கும் மேற்பட்ட இலக்குகளைக் குறி வைத்து இஸ்ரேல் தாக்கியுள்ளது.

7) நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா இழந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் நியூசிலாந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. சொந்த மண்ணில் இந்தியா 12 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

English News

1) According to the School Education Department, classes 12th government school students preparing for higher education competitive examinations will be given coaching on Saturdays through district-level higher education guidance centers. In the first phase, these training courses will be held in 15 districts.

2) In order to realize the importance of the mother tongue, the Central Classical Tamil Research Institute has announced competitions.

3) President Draupadi Murmu has said that development of the country is not possible without the participation of tribals.

4) Both countries are gradually withdrawing Indian and Chinese forces from the border.

5) Germany to quadruple visas for Indian workers

6) Israel launched a direct war on Iran. Israel has targeted more than 20 Iranian targets.

7) India lost the Test cricket series against New Zealand. New Zealand have won two matches in the three-match series to clinch the series. It is noteworthy that India has suffered a defeat at home after 12 years.

No comments:

Post a Comment