எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் தெரியுமா?
தங்க
நகைகளை விரும்பாதவர் யார்?
தங்கத்தில்
ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறைவது இல்லை என்பதால் எல்லாருடைய விருப்பமும் தங்க
நகையாகத்தானே இருக்கிறது.
திருமணம்,
காதுகுத்தல், மஞ்சள் நீராட்டு விழா என்று எந்த விழாவில் தங்கம் இல்லாமல் இருக்கிறது?
எல்லாருடைய
எக்கால விருப்பமான தங்கத்தை ஒருவர் எவ்வளவு வைத்திருக்கலாம் என்ற விவரம் தெரிந்து கொள்ள
வேண்டியது அல்லவா? அளவைத் தாண்டி தங்கம் வைத்திருந்தால் என்ன நடக்கும் என்பதை உங்களுக்குச்
சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படி வைத்திருந்தால் என்ன நடக்கும் என்பதை அறிந்து
கொள்வதற்கு முன்பாக ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதை முதலில் தெரிந்து
கொள்வோம்.
திருமணமான
பெண் 500 கிராம் தங்க நகைகளை வைத்திருக்கலாம். அதாவது அரை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்.
பவுன் கணக்கில் சொன்னால் அறுபத்து இரண்டரை பவுன் வரை வைத்திருக்கலாம்.
திருமணம்
ஆகாத பெண் 250 கிராம் தங்க நகைகளை வைத்திருக்கலாம். அதாவது கால் கிலோ தங்கம் வைத்திருக்கலாம்.
பவுன் கணக்கில் சொன்னால் முப்பத்து ஒன்றே கால் பவுன் வரை வைத்திருக்கலாம்.
ஆண்
திருமணம் ஆனவராகவும் இருந்தாலும் சரி, ஆகாதவராக இருந்தாலும் சரி 100 கிராம் வரை வைத்திருக்கலாம்.
அதாவது பனிரெண்டரை பவுன் வரை வைத்திருக்கலாம்.
இவ்வளவு
நகைகளை ஆண் / பெண் வைத்துக் கொள்ள எவ்வித ஆவணங்களும் தேவையில்லை.
இப்போது
எவ்வளவு தங்கத்தை வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பார்த்து விட்டோமா? இனி இந்த அளவைத்
தாண்டி வைத்துக் கொண்டால் எப்படிப்பட்ட விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து
கொள்ள வேண்டும் இல்லையா?
மேற்படி
குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆண் / பெண் வைத்துக் கொள்ளக் கூடாதா என்றால் உரிய ஆவணங்களோடு
வைத்திருக்கலாம். உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருக்கும் பட்சத்தில் வருமான வரிச் சோதனையின்
போது பிடிபட்டால் அந்த நகைகளின் மொத்த மதிப்பும் வருமானமாக எடுத்துக் கொள்ளப்பட்டு
அதற்குரிய வரி, வட்டி மற்றும் அபராதத் தொகையுடன் செலுத்த நேரிடும்.
தங்கம்
வாங்கி வைத்திருக்க நினைப்பவர்களுக்கு மேற்படி விவரங்கள் பயனுள்ளதாக அமைந்திருக்கும்
என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. மேற்படி விவரங்களுக்கு ஏற்ப தங்கத்தை
வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் மக்களே!
*****
No comments:
Post a Comment