Tuesday 22 October 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 23.10.2024 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)  16 வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி.

2) டானா புயல் முன்னெச்சரிக்கையாகத் தமிழகத்தில் ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

3) பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 97 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

4) தீபாவளிப் பண்டிகையை ஒட்டி ரூ. 499க்கு 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பைப் பெறும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

5) தேசிய மகளிர் ஆணைய தலைவராக மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஜயா கிஷோர் ரஹாத்கர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

6) மலேரியா இல்லாத தேசமாக எகிப்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எகிப்துடன் சேர்த்து 44 நாடுகள் உலக அளவில் உலக சுகாதார அமைப்பால் மலேரியாக இல்லாத நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

7) மெக்சிகோவில் நடைபெற்று பெறும் உலகக் கோப்பை வில் வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

English News

1) Prime Minister Narendra Modi left for Russia on a two-day official visit to participate in the 16th BRICS Summit.

2) As a precaution against Cyclone Dana, storm warning cage number one has been installed in nine ports in Tamil Nadu.

3) 97 government school students have been allotted seats based on 7.5 percent reservation for admission in traditional medical courses.

4) On the occasion of Diwali a special package of Rs. 499 was launched yesterday to get 15 grocery items.

5) Vijaya Kishore Rahatkar from Maharashtra has taken charge as the Chairperson of National Commission for Women.

6) Egypt is recognized as a malaria free country. Along with Egypt, 44 countries have been recognized globally as malaria-free by the World Health Organization.

7) India's Deepika Kumar wins silver medal in Archery World Cup held in Mexico.

No comments:

Post a Comment