Wednesday 9 October 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 10.10.2024 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)      சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெண்ணி காலாடி, குயிலி, எத்தலப்பர் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாகத் திறந்து வைத்தார்.

2)      உதவி வேளாண்மை அலுவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 125 பேருக்கு முதல்வர் பணி ஆணைகளை வழங்கினார்.

3)      சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

4)      ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

5)      அமெரிக்காவின் ஜான் ஹாப்பீல்டு மற்றும் கனடாவின் ஜெப்ரே ஹிண்டன் ஆகியோருக்கு இயந்திரக் கற்றல் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக 2024 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

6)      விலை உயர்வின் காரணமாகப் பசுமைப் பண்ணைக் கடைகளில் தக்காளி மற்றும் வெங்காய விற்பனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

7)      பொது இடங்களில் குப்பையைக் கொட்டினால் உடனடியாக அபராதம் விதிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

8)      பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று லாவோஸ் செல்கிறார்.

9)      ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாக நீடிப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

10)  எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி37 ராக்கெட்டின் இறுதி பாகம் இஸ்ரோவால் வெற்றிகரமாகக் கடலில் விழ வைக்கப்பட்டது.

English News

1) Chief Minister M. K. Stalin inaugurated the statues of freedom fighters Venni Kaladi, Quili and Ethalapar through video conference.

2) Chief Minister issued work orders to 125 selected Assistant Agriculture Officers.

3) Deputy Chief Minister Udayanidhi Stalin inaugurated the renovated swimming pool at Chennai Marina Beach.

4) The Deputy Chief Minister has said that steps will be taken to pay the employees of the Integrated School Education Scheme.

5) John Hopfield of America and Geoffrey Hinton of Canada have been announced the 2024 Nobel Prize in Physics for their inventions related to machine learning.

6) Government of Tamil Nadu has started sale of tomato and onion in green farm shops due to price hike.

7) A plan to introduce immediate fines for littering in public places.

8) Prime Minister Narendra Modi is leaving for Laos today on a two-day official visit.

9) RBI informed that the repo rate will remain unchanged at 6.5 percent.

10) The final segment of the PSLV C37 rocket launched eight years ago was successfully landed in the sea by ISRO.

No comments:

Post a Comment