பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்கள்!
பாதுகாப்பான
முதலீடு திட்டங்களுக்கு அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகள் தரும் பின்வரும் திட்டங்களைப்
பரிசீலிக்கலாம்.
1. ஐந்தாண்டு நிரந்தர வைப்புத்
திட்டம் :
வங்கிகளில்
ஐந்தாண்டு நிரந்தர வைப்புத் திட்டத்திற்கு 6.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மூத்த
குடிமக்களுக்கு 7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
அதுவே,
அஞ்சலகத்தில் 7.5 சதவீத வட்டி வழங்கப்படுவதால் ஐந்தாண்டு நிரந்தர வைப்புத் திட்டத்தை
வங்கிகளில் தொடங்குவதை விட அஞ்சலகங்களில் தொடங்குவது தற்போது சிறப்பாகும்.
2. பொது சேமநல நிதி (பப்ளிக் பிராவிடன்ட்
பண்ட் – பி.பி.எப்.) :
வங்கிகள்
மற்றும் அஞ்சலகங்களில் இதற்கான கணக்கைத் துவங்கலாம். தற்போது இத்திட்டத்திற்கு 7.1
சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது 15 ஆண்டு காலத் திட்டமாகும். ஓராண்டில் குறைந்தபட்சம்
500 ரூபாயிலிருந்து அதிகபட்சம் ஒன்றரை லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
3. செல்வமகள் சேமிப்புத் திட்டம்
(சுகன்யா சம்ரிதி அக்கௌண்ட் – எஸ்.எஸ்.ஏ.) :
பத்து
வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் இக்கணக்கைத் தொடங்க முடியும். தற்போது இத்திட்டத்திற்கு
8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஓராண்டில் குறைந்தபட்சம் 250 ரூபாயிலிருந்து அதிகபட்சம்
ஒன்றரை லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதே போல ஆண் குழந்தைகளுக்கும் செல்வமகன் சேமிப்புத்
திட்டத்தைத் தொடங்கலாம்.
4. தேசிய சேமிப்பு பத்திரம் (நேஷனல்
சேவிங்க்ஸ் சர்டிபிகேட்) :
ஐந்தாண்டு
முதிர்வு காலம் கொண்ட இத்திட்டத்திற்கு 7.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச
முதலீட்டுத் தொகை ஆயிரம். அதற்கு மேல் 100 இன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும்
முதலீடு செய்யலாம்.
5. மூத்த குடிமக்கள் சேமிப்புத்
திட்டம் (சீனியர் சிட்டிசன் சேவிங்க்ஸ் ஸ்கீம் – எஸ்.சி.எஸ்.எஸ்) :
ஐந்து
ஆண்டு கால முதிர்வு கொண்ட இந்த அஞ்சலகத் திட்டத்தில் மூத்த குடிமக்கள் சேர்ந்து பயன்
பெறலாம். இதற்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான குறைந்தபட்ச முதலீடு
ஆயிரம் ரூபாய், அதிகபட்ச முதலீடு முப்பது லட்ச ரூபாயாகும். கணவன், மனைவி தம்பதி சகிதமாகக்
கணக்குத் தொடங்கினால் ஆறுபது லட்ச ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். வட்டி வருமானத்தை
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சேமிப்புக் கணக்கில் பெற்றுக் கொள்ள முடியும்.
மேற்காணும்
அரசு சார்ந்த பாதுகாப்பான இம்முதலீட்டுத் திட்டங்களில் உங்களது தேவைக்கேற்ப கணக்குத்
தொடங்கிப் பயன்பெறவும்.
*****
No comments:
Post a Comment