Sunday, 19 May 2024

இலவசங்கள் உண்டாக்கப் போகும் ஆபத்தை விளக்கும் கதை!

குறுகிய கால மகிழ்ச்சியின் குறைபாட்டை விளக்கும் கதை!

படித்ததில் பிடித்த கதையொன்று.

இந்தக் கதையோடு நீதியும் அடங்கி இருக்கிறது.

நம் முன்னோர்கள் இப்படித்தானே நமக்கு கதை சொன்னார்கள்.

அப்படி ஒரு கதை.

ஒரு ஜாடி முழுவதும் தானியம் நிரப்பி, அதன் மேல் ஒரு எலியை விட்ட போது, அதுக்குத் தன்னை சுற்றி இவ்வளவு உணவு இருக்கிறதே என்று பயங்கர குஷி.

இனி உணவை தேடி ஓடாமல் சந்தோஷமாய் வாழ்க்கையை கழிக்கலாம் என்று எண்ணி தினமும் தன்னை சுற்றியிருந்த தானியத்தை உண்டது.

நாளாக நாளாக ஜாடியில் உள்ள தானியம் குறைந்து கொண்டே போய், ஒரு நாள் தீர்ந்தே விட்டது.

எலி இப்பொழுது ஜாடிக்குள் நிரந்தரமாய் மாட்டிக்கொண்டு விட்டது. அதனால் வெளியேற முடியவில்லை.

இனி தினம் யாராவது  தானியம் போட்டால் மட்டுமே அதற்கு உணவு. யாரும் போடவில்லை என்றால் பட்டினியால் சாக வேண்டியதுதான்.

அப்படியே யாரவது போட்டாலும் போடுவதை மட்டுமே சாப்பிட முடியும். விரும்பிய அளவு சாப்பிட முடியாது.

இதிலிருந்து கற்று கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

1. குறுகிய கால இன்பங்கள் என்றும் நிரந்தரம் அல்ல. அவை அழிவுப் பாதைக்கே கொண்டு செல்லும். அவை நீண்ட கால பொறிகளுக்கு வழிவகுத்து நிரந்தரமாக சிக்க வைத்து விடும்.

2. சுலபமாக கிடைக்கும் எதுவும் அதற்கு அடிமை ஆக்கிச் சொகுசாய் வாழப் பழக்கி, முன்னேற்றத்தை தடுத்து, வாழ்வை நாசமாக்கி விடும்.

3. தெரிந்த ஒரு கலையை உபயோகிக்காமல் சோம்பேறியானால், அந்த கலையை இழக்க நேரிடும்.

4. சரியான நேரத்தில் சரியான செயல்களை செய்யாமல் விட்டால் வாழ்க்கையையே இழக்க நேரிடும். மனதுக்கு பிடித்ததைத் தேர்ந்தெடுக்க முடியாத நிலைக்கு கட்டாயமாக தள்ளப்படவும் நேரிடும்.

பிறர் தரும் இலவசங்களை நம்பியே வாழ்வோருக்கு இப்படித்தான் ஒரு நிலை ஏற்படுமோ?!

*****

No comments:

Post a Comment