Saturday, 18 May 2024

தமிழ்நாடு அரசின் ‘தோழி’ பெண்கள் தங்கும் விடுதிக்கு விண்ணப்பிக்க…

தமிழ்நாடு அரசின் ‘தோழி’ பெண்கள் தங்கும் விடுதிக்கு விண்ணப்பிக்க…

பணிபுரியும் மகளிருக்கான மாதம் 300 ரூபாய்க்கு ‘தோழி’ பெண்கள் தங்கும் விடுதி தமிழக அரசால் தொடங்கப்படுகிறது.

சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்விடுதிகளில் சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏர் கண்டிஷனர்கள், லிஃப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் போர்டு, அயர்ன் பாக்ஸ், குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சரக்கறை, மைக்ரோவேவ், வாட்டர் கூலருடன் கூடிய ஆர்.ஓ. வாட்டர் போன்றவை உள்ளன. அதோடுகூட சிசிடிவி கேமராக்கள் என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் உள்ளது.

குடும்பங்கள் / உறவினர்களுக்கு அவ்விடத்தில் தங்குவதற்கான விடுதி வழங்கப்படுவதில்லை.

இவ்விடுதிகளில் தங்கும் மகளிர் இரவு 10:00 மணிக்குள் விடுதிக்கு வந்து விடவேண்டும். வெவ்வேறு ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரத்திற்கு ஏற்றாற் போல விடுதிக்கு வரலாம்.

தமிழ்நாடு அரசின் ‘தோழி’ விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும்,  techexe@tnwwhcl.in  என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இது குறித்த மேலதிக விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.tnwwhcl.in/

இவ்விடுதிகளுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.tnwwhcl.in/hostel-details

*****

No comments:

Post a Comment