பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு
எழுதிய மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைத் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகப்
பெற்றுக் கொள்ளலாம்.
2)
குடியரசுத் தலைவர் தலைமையில்
ஆளுநர்கள் மாநாடு இன்றும் நாளையும் புதுடெல்லியில் நடைபெற உள்ளது.
3)
இந்த ஆண்டிற்கான தகைசால்
தமிழர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
4)
புதிய பாஸ்டேக் நடைமுறை
அறிமுகமாகியுள்ளது. பாஸ்டேக் வாங்கியோர் கே.ஒய்.சி. விவரங்களை அக்டோபர் 31க்குள் அளிக்க
வேண்டும்.
5)
ஹிமாச்சல பிரதேசத்தில்
ஏற்பட்ட மேக வெடிப்பால் நாற்பதுக்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர்.
6)
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர்
எண்ணிக்கை 300ஐக் கடந்தது. நிலச்சரிவு மீட்புப் பணிகளில் இந்திய விமானப் படை தீவிரமாக
ஈடுபட்டுள்ளது.
7)
வயநாடு நிலச்சரிவில் பலியானோருக்கு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.
8)
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு
இரண்டு லட்சம் கன அடி நீர் வரத்தை எதிர்கொள்கிறது காவிரி.
9)
சென்னை மெட்ரோவில்
95.35 லட்சம் பேர் சூலை மாதத்தில் மட்டும் பயணித்துள்ளனர்.
10)
துப்பாக்கிச் சுடுதலில்
வெண்கலப் பதக்கம் வென்றார் ஸ்வப்னில் குசாலே.
11)
பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து
பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெளியேறினார்.
12)
சென்செக்ஸ் 82000 புள்ளிகளைக்
கடந்தும் நிப்டி 25000 புள்ளிகளைக் கடந்தும் புதிய உச்சத்தைத் தொட்டன.
English
News
1) Students who have appeared in Class 12th General
Examination can get the original marks certificates from their respective
schools.
2) The Governors' Conference will be held today and
tomorrow in New Delhi under the chairmanship of the President.
3) Kumari Ananthan has been selected for the Thakaisal
Tamil Award for this year.
4) New FASTAG procedure introduced. K.Y.C. Details
should be provided by FASTAG users by October 31.
5) More than forty people are missing due to cloudburst
in Himachal Pradesh.
6) Wayanad landslide death toll crosses 300. Indian Air
Force is actively engaged in landslide rescue operations.
7) US President Joe Biden expressed his condolences to
the victims of the Wayanad landslide.
8) After five years, Cauvery faces an inflow of two lakh
cubic feet of water.
9) 95.35 lakh people traveled in Chennai Metro in the
month of July alone.
10) Swapnil Kusale won bronze medal in shooting.
11) Badminton player BV Sindhu dropped out of Paris
Olympics.
12) Sensex crossed 82000 points and Nifty crossed 25000
points to hit new highs.
No comments:
Post a Comment