Thursday, 15 August 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 16.08.2024 (வெள்ளி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  இந்தியாவின் எழுச்சி உலகிற்கு உத்வேகம் ஊட்டுவதாகப் பிரதமர் சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.

2)                  மலிவு விலையில் மருந்துகள் வழங்கும் முதல்வர் மருந்தகம் பொங்கல் முதல் துவங்கும் என முதல்வர் சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.

3)                  புதுச்சேரியில் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக சுதந்திர தின உரையில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

4)                  இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பொழிவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5)                  மாவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

6)                  தமிழகத்துக்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் ஆகஸ்ட் 27 இல் அமெரிக்கா செல்கிறார்.

7)                  தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக கோவை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

8)                  ஆதார் ஆணையத்துக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படுவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

9)                  எம்பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் உலகெங்கும் பரவத் தொடங்கியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

10)              வினேஷ் போகத்தின் மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

English News

1) The Prime Minister said in his Independence Day speech that the rise of India is an inspiration to the world.

2) Chief Minister in his Independence Day speech said that the Chief Minister's Pharmacy will start from Pongal to provide medicines at affordable prices.

3) Chief Minister Rangasamy said in his Independence Day speech that agriculture loan will be waived off in Puducherry.

4) Heavy rain is likely in Coimbatore and Nilgiri districts today, the Meteorological Department said.

5) Government of Odisha has announced that women will be given one day leave with pay on period days.

6) CM to visit USA on August 27 to attract business investments to Tamil Nadu.

7) Coimbatore Corporation has been chosen as the best Corporation in Tamil Nadu.

8) Finance Ministry informed that Income Tax Exemption will be given to Aadhaar Authority.

9) The World Health Organization has warned that the monkey measles disease known as Mpox has started to spread around the world.

10) Vinesh Bhog's appeal is dismissed.

No comments:

Post a Comment