பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
கடலூர், அரியலூர், பெரம்பலூர்,
திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில்
ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2)
ஷேக் ஹசினாவுக்கு இந்தியா
அளித்திருக்கும் தஞ்சம் தற்காலிகமானதே என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3)
குடியரசுத் தலைவர் திரௌபதி
முர்முவுக்கு பிஜி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
4)
ஜனநாயகக் கட்சியின் துணை
அதிபர் வேட்பாளராக டிம் வால்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பள்ளி ஆசிரியராகவும்
ராணுவ வீரராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
5)
வங்கதேசத்தில் கலவரக்காரர்கள்
நட்சத்திர ஓட்டலுக்கு வைத்த தீயில் 24 பேர் உடல் கருகி பலியாகினர்.
6)
வங்கதேச முன்னாள் பிரதமர்
கலிதா ஜியா வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
7)
வங்க தேச இடைக்கால அரசுக்கு
முகமது யூனூஸ் தலைமை வகிக்க வேண்டும் என்று அந்நாட்டின் மாணவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
8)
பாரிஸ் ஒலிம்பிக்கில்
ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
9)
பாரிஸ் ஒலிம்பிக்கில்
மல்யுத்தப் பிரிவில் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
10)
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி
அரை இறுதியில் இந்திய ஹாக்கி அணி ஜெர்மனியுடன் போராடித் தோற்றது.
English
News
1) According to Meteorological Department, one or two
places in nine districts including Cuddalore, Ariyalur, Perambalur, Trichy,
Thanjai, Tiruvarur, Nagai, Mayiladuthurai, Pudukottai are likely to receive
heavy rain today.
2) Central Government has said that the asylum given by
India to Sheikh Hasina is temporary.
3) President Draupadi Murmu has been honored with the
highest award of Fiji.
4) Tim Walls has been selected as the Democratic Vice
Presidential nominee. It is noted that he worked as a school teacher and a
soldier.
5) In Bangladesh, 24 people were burnt to death when
rioters set a star hotel on fire.
6) Former Bangladesh Prime Minister Khaleda Zia released
from house arrest.
7) The student organization of Bangladesh has insisted
that Mohammad Yunus should head the interim government of Bangladesh.
8) Neeraj Chopra qualifies for javelin final at Paris
Olympics.
9) Vinesh Phogat has advanced to the finals of the
wrestling category at the Paris Olympics.
10) The Indian hockey team lost against Germany in the
semifinals of the Paris Olympics.
No comments:
Post a Comment