Monday 26 August 2024

பணத்திற்கு அடிப்படை எது தெரியுமா?

Basic of the money!

பணத்தைக் காகித வடிவில் அச்சடிக்கிறோம். காகிதத்திற்குப் பஞ்சமில்லை. அதனால் இருக்கின்ற காகிதங்களில் எல்லாம் பணத்தை அச்சடித்து விட முடியுமா? அதுதான் முடியாது.

பணத்தை அச்சடிப்பதற்கான பொருளாதார அடிப்படை ஒன்று இருக்கிறது. அதுதான் தங்கம். தங்கத்தின் கையிருப்பைப் பொருத்தே ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியும் பணத்தை அச்சடிக்கும். இதைத்தான் Gold Exchange Standard என்கிறார்கள்.

உலக நாடுகள் இந்தப் பொதுவான முறையை ஏற்றுக் கொண்டுதான் பணத்தை அச்சடிக்கின்றன. இதை மீறி அச்சடிக்க முடியுமா என்றால் அது ஒவ்வொரு நாடும் எடுக்கும் முடிவைப் பொருத்தது. அப்படி அச்சடித்தால் என்னவாகும் தெரியுமா? பணவீக்கம் ஏற்படும்.

Gold Exchange Standard ஐ மீறாமல் இருப்பதே ஒவ்வொரு நாட்டின் பொருளாதரத்திற்கும் நல்லது. அப்படியானால் இதை எந்த நாடு மீறும்? எந்த நாடும் மீறாதுதான். அதை மீறும் போதுதான் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகின்றன.

உதாரணமாக இந்தப் பொருளாதார அடிப்படையை 1971 இல் அமெரிக்கா மீறியது. இப்போதும் மீறிக் கொண்டு இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் பல நேரங்களில் ஆட்டம் காண்பது இதனால்தான்.

இப்போது அமெரிக்கா அச்சடிக்கும் பண மதிப்புக்கும் அதனிடம் இருக்கும் தங்க மதிப்புக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. இதனால் அமெரிக்கா தேவைக்கதிகமாகவே பண மதிப்பைக் காகித வடிவில் அதாவது டாலர் நோட்டுகளாக அச்சடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் இந்தச் செய்கையால் அந்த நாட்டின் கடன் ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது. உலகின் பணக்கார நாடு அமெரிக்கா என்று சொல்லும் அதே வேளையில் உலகின் முதன்மையான கடன்கார நாடும் அதுவாகவே இருப்பது ஒரு பெரிய முரண் அல்லவா. இந்த முரண் Gold Exchange Standard ஐ மீறியதால் ஏற்பட்ட விளைவு.

அமெரிக்கா நீண்ட நாட்கள் இப்படி செய்து கொண்டிருக்க முடியாது. அதாவது தன்னிடம் இருக்கும் தங்க மதிப்பைத் தாண்டி, பணத்தை அச்சடித்துக் கொண்டிருக்க முடியாது. அதன் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்தால் மீண்டும் அது தங்கத்தின் இருப்பிற்குத் தகுந்தாற் போல பணத்தை அச்சடிக்க வேண்டிய கட்டுபாடான நிலைமை ஏற்படும். அப்போது தங்கத்தின் மதிப்பு ஏகத்திற்கு எகிறும்.

இதனால்தான் உண்மையான பணம் என்பது தங்கம் எனப்படுகிறது. தங்கத்திற்கு நிகரான காகிதப் பணமே நாம் பயன்படுத்தும் அரசாங்க பணம். அந்தப் பணத்திற்கு உரிய மதிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்றால் Gold Exchange Standard ஐ ஒரு நாட்டின் அரசாங்கம் மீறாமல் இருக்க வேண்டும்.

ஆனால் பணத்தின் மதிப்பு மேலே ஏறினாலும், கீழே சறுக்கினாலும் சரி, தங்கத்தின் மதிப்பு நிலையானது. ஏனென்றால் அதுவே எப்போதும் உண்மையான பணம். அதுவே பணத்திற்கு அடிப்படை. இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே பணத்தின் அடிப்படை எது என்று. தங்கம்தான் அந்த அடிப்படை. பொருளாதாரத்தின் மாறாத அடிப்படை அலகு அதுவே.

No comments:

Post a Comment