வெற்றிக்கு
ஏதும் வாயில்கள் இருக்கிறதா?
இருக்கிறது.
வாய்ப்புகள்தான் அதன் வாயில்கள்.
நீங்கள்
பணக்காரராக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் உங்களுக்கான வாய்ப்புகள் இந்த உலகில் உருவாகிக்
கொண்டேதான் இருக்கின்றன.
வாய்ப்புகளைச்
சரியாகப் பயன்படுத்திக் கொள்வது தங்கப் பொக்கிசத்தைக் கண்டறிவதைப் போன்றது. அதே நேரத்தில்
வாய்ப்புகள் போன்று தோற்றம் தரும் வாய்ப்புகளிடம் எச்சரிக்கையாக இருப்பதும் முக்கியம்.
ஏனென்றால் இவை உங்களுடைய சக்தி, நேரம், பணம் எல்லாவற்றையும் உறிஞ்சி எடுத்து விடும்.
வாய்ப்புகளைச்
சரியாகக் கண்டறிந்து பயன்படுத்திக் கொண்டவர்கள் பெரிய நிறுவனங்களை, புதிய வரலாற்றை
உருவாக்கியிருக்கிறார்கள். மைக்ரோசாப்ட்டை உருவாக்கிய பில்கேட்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை
உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோர் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களே.
கிடைத்த
வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தி தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே வளர்த்துக் கொண்டே
போவதும் முக்கியம். இல்லையென்றால் பெற்ற உயரத்தைத் தக்க வைப்பது கடினம்.
ஒரு
கணக்கெடுப்பின் படி வாய்ப்புகளைச் சரியாகத் தொடர்ந்து பயன்படுத்தியபடி 1.7 சதவீதத்துக்குக்
குறைவான நிறுவனங்களே நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து நிற்கின்றன. ஆரம்பத்தில்
வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினாலும் காலப்போக்கில் வாய்ப்புகளைக் கண்டறிந்து
பயன்படுத்திக் கொள்வதில் பின்தங்கி வீழ்ந்த நிறுவனங்களும் இருக்கின்றன. போலராய்டு,
கோடாக், பிளாக்பெர்ரி, நோக்கிய போன்ற நிறுவனங்கள் குறுகிய காலத்திலேயே வீழ்ந்த நிறுவனங்கள்.
தொடர்ந்து
இந்த உலகில் உண்டாகும் வாய்ப்புகளைக் கண்டறிந்து அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன்
மூலமாக நீங்களும் இந்த உலகில் வெற்றியாளராக உங்கள் முத்திரையைப் பதிக்கலாம்.
No comments:
Post a Comment