Sunday 18 August 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 19.08.2024 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  தொலைநிலைக் கல்வி மூலமாக உயர்கல்வி பெற விரும்புவோர் பல்கலைக்கழக மானியக் குழு இணையதளம் மூலமாக தனித்துவ எண் பெற்றே இனி உயர்கல்வி பயில முடியும் எனும் புதிய நடைமுறை அமலாகிறது.

2)                  அத்திக்கடவு – அவிநாசி நீர் செறிவுத் திட்டத்தை முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார்.

3)                  முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது.

4)                  மலையாளத்தில் வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படம் 9 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

5)                  தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 4 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

6)                  வானிலை முன்னறிவிப்பை வலுபடுத்த இராமநாதபுரம், ஏற்காடு ஆகிய இரு இடங்களில் சி பேண்ட் டோப்ளர் ரேடார்கள் நிறுவப்படுகின்றன.

7)                  ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வெள்ளி அன்று திறக்கப்பட்டது.

8)                  அறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 24 ஆம்தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

9)                  கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் சனி அன்றி வேலை நிறுத்தம் செய்தனர்.

10)              கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலையைத் தாமாக முன் வந்து உச்சநீதி மன்றம் விசாரிக்க உள்ளது.

11)              ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக அக்டோபர் 1 அன்று நடைபெற உள்ளது.

12)              கடந்த 42 மாதங்களில் மூன்றே கால் லட்சத்திற்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள் தமிழகத்தில் நடந்துள்ளதாக குடும்ப நல இயக்ககம் தெரிவித்துள்ளது.

13)              ஆப்பிரிக்காவில் பரவி வரும் குரங்கு அம்மை நோய் குறித்து உலக நாடுகள் கவனமாக இருக்க உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

English News

1) A new procedure is being implemented that those who wish to pursue higher education through distance education can now pursue higher education by obtaining a unique number through the University Grants Committee website.

2) The Chief Minister inaugurated the Athikadavu – Avinasi water concentration project yesterday.

3) The centenary commemorative coin of former Tamil Nadu Chief Minister M. Karunanidhi was released in Chennai yesterday.

4) Malayalam film Aadu Jeevitham has won 9 national awards.

5) Ponniyin Selvan movie released in Tamil has won 4 national awards.

6) C band Doppler radars are being installed at Ramanathapuram and Yercaud to enhance weather forecasting.

7) Sabarimalai Ayyappan temple opened on Friday for Avani month puja.

8) Thiruchendur Subramania Swamy Temple, one of the Arupadai houses, starts the Avani festival on 24th with flag hoisting.

9) Nationwide strike on Saturday to condemn Kolkata woman doctor massacre.

10) Kolkata woman doctor massacre to be investigated by Supreme Court itself.

11) Haryana and Jammu and Kashmir assembly elections are scheduled to be held in a single phase on October 1.

12) In the last 42 months, more than three and a quarter lakh abortions have taken place in Tamil Nadu, according to the Directorate of Family Welfare.

13) The World Health Organization has advised countries to be careful about monkey measles spreading in Africa.

No comments:

Post a Comment