Wednesday 14 August 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 15.08.2024 (வியாழன்)

இன்றைய செய்திகள் – 15.08.2024

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) 78வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

2) டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின உரை வழங்க உள்ளார்.

3) சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவலர்களுக்குக் குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

4) தேசிய தர வரிசைப் பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி பத்தாவது இடம் பிடித்துள்ளது.

5) புதிய தொழில் தொடங்குவதற்கான 15 முதலீட்டுத் திட்டங்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

6) சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் 54வது கூட்டம் செப்டம்பர் 9 இல் நடைபெற உள்ளது.

7) ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

8) இன்று ஏவப்படுவதாக இருந்த எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் நாளை ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

9) இந்தியாவின் மக்கள் தொகை 2036 இல் 152 கோடியாகும் என மத்திய புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

10) பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் 25 பதக்கங்களுக்கு மேல் வெல்வோம் என இந்திய பாராலிம்பிக் கமிட்டித் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

English News

1) 78th Independence Day is being celebrated across the country today.

2) Prime Minister Narendra Modi is going to hoist the national flag and deliver the Independence Day speech at the Independence Day ceremony at the Red Fort in Delhi.

3) President's medal has been announced to 23 policemen from Tamil Nadu on the occasion of Independence Day.

4) Chennai Medical College is ranked tenth in the national ranking list.

5) Government of Tamil Nadu has announced 15 investment schemes for starting new businesses.

6) The 54th meeting of the Goods and Services Tax Council is scheduled to be held on September 9.

7) The Government of Tamil Nadu has issued an ordinance to upgrade Sriperumbudur, Mamallapuram and Thiruvaiyaru to Municipalities.

8) ISRO informed that the SSLV T-3 rocket which was to be launched today will be launched tomorrow.

9) According to the Union Ministry of Statistics, India's population will be 152 crores in 2036.

10) Indian Paralympic Committee President has expressed confidence that India will win more than 25 medals in Paris Paralympics.

No comments:

Post a Comment