பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
தமிழகத்தின் 50வது தலைமைச்
செயலாளராக நா. முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
2)
எம்.பி.பி.எஸ். மற்றும்
பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கான தர வரிசை பட்டியலை சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன்
வெளியிட்டார்.
3)
மருத்துவ படிப்புக்கான
தர வரிசைப் பட்டியலில் நாமக்கல் ரஜினீஷ் முதலிடத்தையும், சென்னை சையது யூசுப் இரண்டாம்
இடத்தையும், சென்னை ஷைலஜா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
4)
மருத்துவப் படிப்புக்கான
அரசு பள்ளிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் ரூபிகா முதலிடத்தையும், காயத்ரிதேவி இரண்டாமிடத்தையும்,
அனுஷியா மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர்.
5)
தமிழகம் முழுவதிலும் உள்ள
அரசுப் பள்ளிகளில் இரவுக் காவலர் பணிகள் விரைவில் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
6)
சென்னை கோயம்பேடு சந்தையில்
காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
7)
இந்திய பிரதமர் ஆகஸ்ட்
23 இல் உக்ரைன் செல்ல உள்ளார்.
8)
மலேசிய பிரதமர் அன்வர்
இப்ராகிம் மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
9)
ஒரு மாதத்திற்குப் பிறகு
வங்கதேசத்தில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
10)
இந்தியாவுடன் இலங்கை விரிவான
பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளது.
English
News
1) N. Muruganandam I.A.S. appointed as the 50th Chief
Secretary of Tamil Nadu.
2) Minister of Health M. Subramanian has announced the
rank list for MBBS and BDS medical studies.
3) Namakkal Rajneesh got the first position, Chennai
Syed Yusuf got the second position and Chennai Shailaja got the third position
in the rank order list for medical studies.
4) Rubika stands first, Gayathridevi stands second and
Anushiya stands third in the rank order list of government schools for medical
studies.
5) School Education Minister Anbil Mahesh Poiyamozhi has
said that the posts of night guards will be filled soon in government schools
across Tamil Nadu.
6) Price of vegetables has decreased in Koyambedu
Market, Chennai.
7) Indian PM to visit Ukraine on August 23.
8) Malaysian Prime Minister Anwar Ibrahim has arrived in
India on a three-day official visit.
9) After one month educational institutes are opened in
Bangladesh.
10) Sri Lanka to enter into comprehensive economic
agreements with India.
No comments:
Post a Comment