Tuesday, 20 August 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 21.08.2024 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனைகள் வழங்க முடியாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2)                  நேற்றிலிருந்து தமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்புப் பணி துவங்கியது. இப்பணி அக்டோபர் 18 வரை நடைபெறும்.

3)                  மத்திய அரசு பணிகளில் நேரடி நியமன முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

4)                  சேலம் ரயில்வே கோட்டத்தில் விரைவுத் துலங்கல் குறியீடு மூலமாக பண பரிவர்த்தனை செய்து பயணச் சீட்டு பெறும் முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

5)                  ஓட்டுநர்கள் இல்லாத மெட்ரோ ரயில்கள் அடுத்த மாதம் முதல் சென்னையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

6)                  சிறந்த வங்கியாளராக உலகளவில் இரண்டாமாண்டாக முதலிடம் பிடித்தார் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்.

7)                  இரவில் பணி புரியும் பெண் மருத்துவர்களுக்குப் பாதுகாவலர்களை நியமிக்க மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

8)                  ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களைத் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.

9)                  உலகின் அதிக வயது பெண்மணியான ஸ்பெயினைச் சார்ந்த மரியா பிரான்யாஸ் 117 வயதில் காலமானார்.

10)              மகளிர் டி20 உலகக்கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

English News

1) Minister of School Education Department Anbil Mahesh Poiyamozhi said that severe punishments cannot be given if school students make mistakes.

2) Voter Verification started in Tamil Nadu from yesterday. This work will be done till October 18.

3) The central government has announced that the system of direct appointment in central government jobs will be abolished.

4) In Salem Railway Zone, the system of getting tickets through Quick Response Code has been implemented.

5) Driverless metro trains to be introduced in Chennai from next month.

6) Reserve Bank of India Governor Shaktikanta Das tops the list of best bankers worldwide for the second consecutive year.

7) Union Health Ministry has directed to appoint bodyguards for women doctors working at night.

8) Apple has decided to manufacture its iPhones in Tamil Nadu.

9) The world's oldest woman Maria Branyas from Spain passed away at the age of 117.

10) ICC has announced that the Women's T20 World Cup will be shifted to the United Arab Emirates.

No comments:

Post a Comment