பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
எப்படிப்பட்ட மழையையும்
எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
2)
கடந்த 24 மணி நேரத்தில்
அதிகபட்சமாக நெய்வேலியில் 11.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
3)
ஒகேனக்கலுக்கு வரும் நீர்
வரத்து 31000 கன அடியாகக் குறைந்துள்ளது.
4)
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர்
எண்ணிக்கை 400 ஐக் கடந்தது.
5)
பிஜி தீவுக்குச் சென்றுள்ள
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்று அளிக்கப்பட்டது.
6)
வங்கதேச பிரதமர் ஷேக்
ஹசினா பதவியை ராஜினாமா செய்துள்ளார். வங்கதேசத்தில் இடைக்கால ஆட்சியை அமைக்க உள்ளதாக
அந்நாட்டின் ராணுவம் தெரிவித்துள்ளது.
7)
ஈரானுக்கு எதிராகத் தாக்குதல்களை
நடத்த இஸ்ரேல் தயாராக உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
8)
அமெரிக்காவில் வேலை வாய்ப்பின்மை
அதிகரிப்பால் உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
9)
27 ஆண்டுகளுக்குப் பிறகு
இலங்கையிடம் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்தியா இழந்துள்ளது.
10)
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்
போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
English
News
1) The Chief Minister has said that the Tamil Nadu
government is ready to face any kind of heavy rain.
2) Maximum 11.6 cm rain is reported in Neyveli in last
24 hours.
3) Inflow of water to Okanakkal has reduced to 31000
cubic feet.
4) Wayanad landslide death toll crosses 400.
5) President of India Draupadi Murmu who visited Fiji
Island was given a warm welcome.
6) Bangladesh Prime Minister Sheikh Hasina has resigned.
The army of the country has announced that it is going to establish an interim
government in Bangladesh.
7) Israeli Prime Minister Benjamin Netanyahu has warned
that Israel is ready to launch attacks against Iran.
8) Stock markets around the world have suffered a sharp
decline due to rising unemployment in the US.
9) India lost ODI series to Sri Lanka after 27 years.
10) Indian women's team has advanced to the
quarterfinals of the Olympic table tennis tournament.
No comments:
Post a Comment