Thursday, 22 August 2024

இந்தப் பெட்டி தெரியுமா? இந்தப் பெட்டி தெரியுமா?

நினைவாற்றலை வளர்க்கும் சிறார் பாடல்!

இந்தப் பெட்டி தெரியுமா? இந்தப் பெட்டி தெரியுமா?

நினைவாற்றலை வளர்க்கும் இப்பாடலை பள்ளிப் பருவத்தில் பாடாதவர்கள் இருக்க முடியுமா? இந்தப் பாடலைப் பாட பாட மலரும் நினைவுகள் வருவதைத் தவிர்க்கத்தான் முடியுமா? இந்தப் பாடலை இந்தத் தலைமுறைக்குச் சொல்லிக் கொடுக்காமல்தான் இருக்க முடியுமா?

இந்தப் பெட்டி தெரியுமா? இந்தப் பெட்டி தெரியுமா?

இந்தப் பெட்டி தெரியுமா?

இந்தப் பெட்டி தெரியுமா?

முத்து செய்த பெட்டியும் இதுதான்! இதுதான்!

இந்த ரொட்டி தெரியுமா?

இந்த ரொட்டி தெரியுமா?

முத்து செய்த பெட்டியில்

வைத்த நல்ல ரொட்டியும் இதுதான்! இதுதான்!

இந்த எலி தெரியுமா?

இந்த எலி தெரியுமா?

முத்து செய்த பெட்டியில்

வைத்த நல்ல ரொட்டியை

தினம் தின்ற எலியும் இதுதான்! இதுதான்!

இந்தப் பூனை தெரியுமா?

இந்தப் பூனை தெரியுமா?

முத்து செய்த பெட்டியில்

வைத்த நல்ல ரொட்டியை

தினம் தின்ற எலியை

விரட்டிச் சென்ற பூனையும் இதுதான்! இதுதான்!

இந்த நாய் தெரியுமா?

இந்த நாய் தெரியுமா?

முத்து செய்த பெட்டியில்

வைத்த நல்ல ரொட்டியைத்

தினம் தின்ற எலியை

விரட்டிச் சென்ற பூனையை

துரத்திச் சென்ற நாயும் இதுதான்! இதுதான்!

இந்தப் பசு தெரியுமா?

இந்தப் பசு தெரியுமா?

முத்து செய்த பெட்டியில்

வைத்த நல்ல ரொட்டியைத்

தினம் தின்ற எலியை

விரட்டிச் சென்ற பூனையை

துரத்திச் சென்ற நாயை

உதைத்திட்ட பசுவும் இதுதான்! இதுதான்!

இவர் யார் தெரியுமா?

இவர் யார் தெரியுமா?

முத்து செய்த பெட்டியில்

வைத்த நல்ல ரொட்டியைத்

தினம் தின்ற எலியை

விரட்டிச் சென்ற பூனையை

துரத்திச் சென்ற நாயை

உதைத்திட்ட பசுவின் பாலைக்

கறந்திட்டவர் இவர்தான்! இவர்தான்!

நாங்கள் யார் தெரியுமா?

நாங்கள் யார் தெரியுமா?

முத்து செய்த பெட்டியில்

வைத்த நல்ல ரொட்டியைத்

தினம் தின்ற எலியை

விரட்டிச் சென்ற பூனையை

துரத்திச் சென்ற நாயை

உதைத்திட்ட பசுவின்

கறந்திட்ட பாலை

மூச்சு முட்ட குடித்தவர்கள் நாங்கள்தான்! நாங்கள்தான்!

***

இந்தப் பாடலை இப்படி முடிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியும் பெருமித உணர்வும் கோடி கொடுத்தாலும் பெற முடியாதுதானே!

*****

No comments:

Post a Comment