Tuesday 13 August 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 14.08.2024 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  இந்தியாவின் கல்வி மையமாகத் தமிழகம் திகழ்வதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2)                  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

3)                  தமிழகத்தில் ஐந்து நாட்களுக்குக் கனமழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4)                  சுதந்திர தின விழாவை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு சென்னையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

5)                  இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையில் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.

6)                  மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 45000 கன அடியாக அதிகரித்துள்ளது.

7)                  தங்கத்தின் விலை சவரனுக்கு 52000 ஐத் தாண்டியது.

8)                  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாகப பரிசோதிக்கப்பட்டது.

9)                  செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கலாம் என்பதற்கான ஆதாரத்தை நாசா வெளியிட்டுள்ளது.

10)              உக்ரைனுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட மாட்டாது என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

11)              தென்கொரியாவில் வெப்ப அலைக்கு 21 பேர் பலியாகியுள்ளனர்.

English News

1) The Chief Minister proudly expressed that Tamil Nadu is the educational hub of India.

2) Senior IAS. Officer S.K. Prabhakar has been appointed as Chairman of Tamil Nadu Public Service Commission.

3) The Meteorological Department has said that there is a possibility of heavy rain for five days in Tamil Nadu.

4) Drones have been banned from flying in Chennai for two days ahead of the Independence Day celebrations.

5) 110 people died in heavy rains in Himachal Pradesh.

6) Water flow to Mettur Dam has increased to 45000 cubic feet.

7) Gold price crossed Rs. 52000 per Sovereign.

8) Indian made anti-artillery missile successfully tested.

9) NASA has released evidence that Mars may have water.

10) Russian President Vladimir Putin has said that there will be no peace talks with Ukraine.

11) 21 people have died due to heat wave in South Korea.

No comments:

Post a Comment