Friday, 31 May 2024

சென்டரல் பேங்க் ஆப் இந்தியாவில் பணி வாய்ப்புகள்!

சென்டல் பேங்க் ஆப் இந்தியாவில் உள்ள காலிப் பணியிட விவரங்கள் அறியவும் விண்ணப்பிக்கவும் மேலதிக விவரங்கள் அறியவும் கீழே உள்ள இணைப்பைப் தொடரவும்.

 https://www.centralbankofindia.co.in/en/recruitments

ICMR இல் பணி வாய்ப்புகள்!

Indian Council of Medical Research இல் பல்வேறு பணிவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் அது குறித்த மேலதிக தகவல்களைப் பெறவும் கீழே உள்ள இணைப்பைத் தொடரவும்.

 https://main.icmr.nic.in/career-opportunity

Thursday, 30 May 2024

புதுச்சேரியில் ஜூன் 12 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு!

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடுமையான வெயில் காரணமாக விடுமுறையை நீட்டித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசுப் பணித் தேர்வுகளில் தமிழ்த் தேர்வில் 40% மதிப்பெண் கட்டாயம்!

அரசுப் பணித் தேர்வுகளில் தமிழ்த் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவுத் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011 அரசாணையை எதிர்த்து நிதேஷ் உட்பட 10 விண்ணப்பதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். காலியாக உள்ள 6244 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஜனவரியில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

என்ன படிக்கலாம்?

இது ஒரு போட்டி உலகம். இங்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் உருவாகின்றன.

அந்த காலத்தில் பி.காம் முடித்தவர்களை விரும்பி அழைத்து ,வங்கிப் பணியில் சேர்த்துக் கொண்டார்கள். ஆனால், இப்போது பொறியியல் படிப்பு முடித்தவர்களும், கம்ப்யூட்டர் படிப்பை முடித்தவர்களும் போட்டி போட்டுக் கொண்டு வங்கிப் பணியைத் தேடுகிறார்கள்.

பொறியியல் படிப்புக்கும், வங்கி பணிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? என்று சிந்தித்துப் பார்த்தால், ஒரு உண்மை நமக்கு புலப்படும். அதாவது, எந்தப் படிப்பை படித்தாலும், ஆர்வத்துடன் படித்து, ஒரே குறிக்கோளோடு கவனம் சிதறாமல் அதிக மதிப்பெண்கள் பெற்று, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டவர்களுக்கு எல்லா இடத்திலும் வேலை காத்திருக்கிறது.

இது ஒரு போட்டி உலகம். இங்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் தானாக உருவாகின்றன .அந்தக் காலத்தில் பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் போன்ற படிப்புகள் மட்டுமே பிரபலமாக பேசப்பட்டது. ஆனால், இன்று எத்தனையோ செய்முறை பயிற்சிகளை பாடங்களாக மாற்றி படிப்புகளை உருவாக்கி விட்டார்கள்.

வேலைவாய்ப்பை உருவாக்கும் பல பயிற்சிகள் இன்று பாடங்களாக மாறிவிட்டது. யாராலும் அடையாளம் காணப்படாமல் இருந்த ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம், இன்று வேலை வழங்கும் ஒரு படிப்பாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பொழுதுபோக்காக வைத்திருந்த மாடலிங், இன்று ஒரு சிறப்பு வாய்ந்த படிப்பாகவும் தொழிலாகவும் மாறிவிட்டது.

அதுமட்டுமல்லாமல், மண்பாண்டம் தயாரித்தல், உணவு தயாரித்தல், செராமிக்ஸ், உள் அலங்காரம் ,உள் வடிவமைப்பு போன்ற தொழில்கள் எல்லாம் இன்று குறுகிய கால டிப்ளமோ படிப்புகளாக மாறிவிட்டன.

மேலும், இதழியல் கலை, மக்கள் தகவல் தொடர்பு, விளம்பரக் கலை, புகைப்படக்கலை, திரைப்பட கேமரா இயக்குதல் மற்றும் வீடியோ எடிட்டிங் போன்றவைகள் எல்லாம் இன்று வேலை தரும் படிப்புகளாக மாறி, வேலை வழங்கும் விதத்தில் இளைய உள்ளங்கள் முன்னால் அணிவகுகின்றன .

நுண் உயிரியல், மீன்வளம், வேளாண்மை, செவிலியர் பணி, ஆய்வு கூட தொழில்நுட்பம் ,ரப்பர் தொழில்நுட்பம், பிளாஸ்டிக் தொழில்நுட்பம் ,சுற்றுப்புற பொருளாதாரம் போன்ற துறைகளில் பல்வேறு படிப்புகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. வியாபாரத்தையும் வணிகத் தொழில் நிறுவனங்களையும் மேம்படுத்தும் வகையில் இன்று ஏராளமான மேலாண்மை படிப்புகளும் உள்ளன.

அதுமட்டுமல்லாமல், ஹோட்டல் தொழிலில் புதிய ஏராளமான ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளும் உருவாக்கப்பட்டு விட்டன. போக்குவரத்து மற்றும் சுற்றுலா பற்றியும் ஏராளமான படிப்புகள் நடத்தப்படுகின்றன.

கம்ப்யூட்டர் துறையில் விதவிதமான படிப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது தவிர, வரலாறு ,புவியியல், அரசியல் அறிவியல், தத்துவவியல் ,உளவியல், பொருளியல், மொழிகள், இசை போன்ற துறைகளில் உள்ள படிப்புகளை படித்தவர்களுக்கு இன்று அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளன. கலைத்துறையில் உள்ள படிப்புகளை விரும்பும் மாணவ மாணவிகள், புத்தாக்க சிந்தனை கொண்டவர்களாகவும், தாங்கள் படிக்கும் படிப்பின் மீது அதிக ஆர்வம் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், தேர்ந்தெடுத்த பாடத்தில் அவர்கள் ஆழ்ந்த அறிவைப் பெற முடியும்.

பல்வேறு துறைகளில் உள்ள வெவ்வேறு வேலை வழங்கும் படிப்புகளை படிப்புகளையும் பயிற்சிகளையும் பார்ப்போம்.

I.அறிவியல் (SCIENCE) துறைகள் .

1.கடல் சார் அறிவியல் (AQUA SCIENCE)

2.வேளாண்மை (AGRICULTURE)

3.வானவியல் (ASTRONOMY)

4.நுண் வேதியியல் (BIO CHEMISTRY)

5.சுற்றுப்புற அறிவியல் (ENVIRONMENTAL SCIENCE)

6.தடய அறிவியல் (FORENSIC SCIENCE)

7.உணவு தொழில்நுட்பம் (FOOD TECHNOLOGY)

8.மண்ணியல் (GEOLOGY)

9.தோட்டவியல் (HORTICULTURE)

10.மனவியல் (HOME SCIENCE)

11.மீட்டராலஜி (METEOROLOGY)

12.மாலிக்குலர் பயாலஜி (MOLECULAR BIOLOGY)

13.கடல் இயல் (OCEANOGRAPHY)

14.பிளான்ட் பாதாலஜி (PLANT PATHOLOGY)

15.பிளாஸ்டிக் சயின்ஸ் (PLASTIC SCIENCE)

16.பிசிகல் சைன்ஸ் (PHYSICAL SCIENCE)

17.போட்டோ நிக்ஸ் (PHOTONICS)

II. பொறியியல் (ENGINEERING) துறைகள்

1.கட்டடவியல் (ARCHITECURE)

2.உயிரி மருத்துவ பொறியியல் (BIO MEDICAL ENGINEERING)

3.உயிரி தொழில்நுட்பம் (BIO TECHNOLOGY)

4.செராமிக் பொறியியல் (CERAMIC ENGINEERING)

5.வேதியியல் பொறியியல் (CHEMICAL ENGINEERING)

6.சுற்றுச்சூழல் பொறியியல் (ENVIRONMENTAL ENGINEERING)

7.மின் பொறியியல் (ELECTRICAL ENGINEERING)

8.ஜெனிடிக் பொறியியல் (GENETIC ENGINEERING)

9.கடல்சார் பொறியியல் (MARINE ENGINEERING)

10.ரப்பர் தொழில்நுட்பம் (RUBBER TECHNOLOGY)

11.வான் தொழில்நுட்பம் (SPACE TECHNOLOGY)

12.நெசவு தொழில்நுட்பம் (TEXTILE TECHNOLOGY)

13.வானூர்தி பொறியியல் (AERONAUTICAL ENGINEERING)

III. மருத்துவத் (MEDICAL) துறைகள்

1.ஆயுர்வேதம் (AYURVEDA)

2.எலக்ட்ரோபதி (ELECTROPATHY)

3.இயற்கை மருத்துவம் (NATUROPATHY)

4.நியூட்ரிசன் மற்றும் டயாடிக்ஸ் (NUTRITION AND DIETICS)

5.ஆக்குபேஷனல் தெரபி (OCCUPATONAL THERAPHY)

6.பிசியோதெரபி (PHYSIOTHEAPHY)

7.ரேடியோ தெரபி (RADIOTHERAPHY)

8.கால்நடை அறிவியல் (VETERINARY SCIENCE)

9.பல் மருத்துவம் (DENTISTRY)

10.ஹோமியோபதி (HONOEOPAYHY)

11.நர்சிங் (NURSING)

12.கண் மருத்துவம் (OPTOMETRY)

13.பார்மசி (PHARMACY)

14.உளவியல் (PSYCHIATRY)

15.ஸ்பீச் அண்ட் ஹியரிங் (SPEECH AND HEARING)

IV. மேலாண்மை (MANAGEMENT) துறைகள்

1.வணிக மேலாண்மை (BUSINESS MANAGEMENT)

2.நிகழ்ச்சி மேலாண்மை (EVENT MANAGEMENT)

3.வெளிநாட்டு வணிக மேலாண்மை (FOREIGN TRADE MANAGEMENT)

4.ஹோட்டல் மேலாண்மை (HOTEL MANAGEMENT)

5.மருத்துவமனை மேலாண்மை (HOSPITAL MANAGEMENT)

6.புதிய அலுவலக மேலாண்மை (MODERN OFFICE MANAGEMENT)

7.பணியாளர் மேலாண்மை (PERSONNEL MANAGEMENT)

8.பொதுமக்கள் மேலாண்மை (PUBLIC MANAGEMENT)

9.சில்லறை வணிக மேலாண்மை (RETAIL MANAGEMENT)

10.கிராம மேலாண்மை (RURAL MANAGEMENT)

11.விற்பனை மற்றும் சந்தையியல் மேலாண்மை (SALES AND MARKETING MANAGEMENT)

12.தேநீர் மேலாண்மை (TEA MANAGEMENT)

V. கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்ப (COMPUTER AND IFORMATION TECHNOLOGY) துறைகள்

1.கால் சென்டர் (CALL CENTRE)

2.கம்ப்யூட்டர் எயிடட் டிசைன் (COMPUTER AIDED DESIGN)

3.கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் (COMPUTER ENGINEERING)

4.சாப்ட்வேர் இன்ஜினியரிங் (SOFTWRE ENGINEERING)

5.ஹார்ட்வேர் இன்ஜினியரிங் (HARDWARE ENGINEERING)

VI. மக்கள் தொடர்பு ( MASS COMMUNICATION )துறைகள்

1.விளம்பரம் (ADVERTISING)

2.பட தயாரிப்பு (FILM MAKING)

3.இதழியல் (JOURNALISM)

4.புத்தக வெளியீடு மற்றும் அச்சுக்கலை (PUBLISHING AND PRINTING)

5.ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர் (RADIO JOCKEY)

6.வீடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர் (VIDEO JOCKEY)

VII. பாதுகாப்பு (DEFENCE FORCES) துறைகள்

1.ஏர்லைன்ஸ் ஆபரேஷன்ஸ் (AIRLINES OPERATIONS)

2.கடலோரக்காவல் (COST GUARD)

3.இந்திய விமானப்படை (INDIAN AIR FORCE)

4.இந்திய ராணுவ படை (INDIAN ARMY)

5.இந்திய கடற்படை (INDIAN NAVY)

6.ராணுவம் சார்ந்த பணிகள் (PARA MILITARY SERVICES)

VIII. கலைத்துறைகள் ( HUMANITIES )

1.ஆந்திரபாலாஜி (ANTHROPOLOGY)

2.தொல்பொருள் ஆய்வு (ARCHAEOLOGY)

3.காலணி தொழில்நுட்பம் (FOOTWEAR TECHNOLOGY)

4.நுண்கலைகள் (FINE ARTS)

5.புவியியல் (GEOGRAPHY)

6.சட்டம் (LAW)

7.நூலக அறிவியல் (LIBRARY SCIENCE)

8.உளவியல் (PSYCHOLOGY)

9.சமூகவியல் (SOCIOLOGY)

10.சமூகப்பணி (SOCIAL WORK)

11.ஆசிரியர் பணி (TEACHING)

IX. வணிகவியல் (COMMERCE) துறைகள்

1.வேளாண் பொருளாதாரம் (AGRICULTURE ECONOMICS)

2.கணக்குப்பதிவியல் (ACCOUNTING)

3.வங்கியியல் (BANKING)

4.சாட்டர்ட அக்கவுண்டன்சி (CHARTERED ACCOUNTANCY)

5.நிறுவனச் செயலர் (COMPANY SECRETARY)

6.பொருளாதாரம் (ECONOMICS)

7.கணிதம் மற்றும் புள்ளியியல் (MATHEMATICS AND STATISTICS)

8.பங்குச்சந்தை (STOCK MARKET)

X. தொழிற்கல்வித்துறைகள் (VOCATIONAL COURSES)

1.அழகுக்கலை (BEAUTICIAN)

2.சிகை அலங்காரம் (HAIR STYLING)

3.போக்குவரத்து மற்றும் சுற்றுலா (TRAVEL AND TOURISM)

4.நகை வடிவமைப்பு (JEWLLERY DESIGN)

XI. இயல் இசை நாடகத் துறைகள் (PERFORMING ARTS)

1.நடித்தல் (ACTING)

2.நடனம் (DANCE)

3.இசை (MUSIC)

XII. இதர துறைகள்

1.ரத்தின கற்கள் ஆய்வு (GEMMOLOGY)

2.விசுவல் மெர்ச்சண்டைசி

3.காப்பீடு (INSURANCE)

4.வானூர்தி ஓட்டும் கலை (AVIATION)

5.பால்பண்ணை (DAIRY FARMING)

6.மெர்சன்ட் நேவி (MERCHANT NAVY)

7.புலனாய்வு பணிகள் (DETECTIVE SERVICES)

கலை பண்பாட்டுப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்க்கைத் தொடங்கியது.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இசைப்பள்ளிகள், நான்கு இடங்களில் இசைக் கல்லூரிகள், இரண்டு கவின் கலைக் கல்லூரிகள் மற்றும் ஒரு சிற்பக் கல்லூரி ஆகியவை செயல்படுகின்றன.

இக்கல்வியகங்களில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான மாணவ/மாணவியர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை (சீர்காழி), திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 17 மாவட்டங்களில் இசைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் மூன்று ஆண்டு சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணாக்கர்கள் அரசு இசைக் கல்லூரியில் நேரடியாக மூன்றாம் ஆண்டில் டிப்ளமோ வகுப்பில் சேருவதற்கு அரசு அனுமதியளித்து ஆணையிட்டுள்ளது. இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.400/- கல்வி உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

சென்னை, கோயம்புத்தூர், திருவையாறு, மதுரை ஆகிய இடங்களில் அரசு இசைக்கல்லூரிகள் செயல்படுகின்றன. இக்கல்லூரிகளில் இசை, நாட்டியம் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்புகளும் மேற்காண் கலைகளோடு கிராமியக் கலைகளில் பட்டயப்படிப்புகளும் உள்ளன. இசைக்கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.500/- கல்வி உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

சென்னை மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு கவின் கலைக்கல்லூரிகளில் ஓவியக்கலை சார்ந்த பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளும், மாமல்லபுரத்தில் செயல்படும் அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் சிற்பக்கலையில் இளங்கலைப் பட்டம் மற்றும் கோவில் கட்டடக் கலையில் பி.டெக் படிப்புகளும் உள்ளன.

இக்கல்வியகங்களில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கை (Admission) தற்போது தொடங்கியுள்ளது. இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் மேலதிக விவரங்கள் அறியவும் கீழே உள்ள இணைப்பைப் பின்தொடரவும்.

https://artandculture.tn.gov.in/

கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

2024 நார்வே சதுரங்கத் தொடரில் உலகின் முன்னனி சதுரங்க வீரர் மேக்னஸ் கார்ல்சனை அவரது சொந்த மண்ணில் வீழ்த்தி தமிழ்நாடு சதுரங்க வீரர் பிரக்ஞானந்தா அபார சாதனைப் படைத்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்தைத் தொடர்ந்து தமிழர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய சம்பவத்தைப் படைத்துள்ளார் பிரக்ஞானந்தா. பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவிப்போம்!

Wednesday, 29 May 2024

வட இந்தியாவை வறுத்தெடுத்த வெயில்!

நம் தென்னிந்தியாவில் வெயில் அதிகரித்து வரும் வேளையில் வட இந்தியாவையோ வெயிலானது வறுத்தெடுத்து வருகிறது.

வட இந்தியாவில் இன்று அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் 123 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி வாட்டி வதைத்தது.

டெல்லியில் பல இடங்களில் 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி மக்களை வாட்டி வறுத்தெடுத்தது

கல்வி குறித்த மத்திய அரசின் இணையதளம்!

கல்வி குறித்த அனைத்துத் தகவல்கள் மற்றும் தரவுகளைத் தரும் தளமாகவும், கல்வியாளர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களுக்குப் பயனுள்ள தளமாகவும் மத்திய அரசின் இத்தளம் உள்ளது. இத்தளம் மூலமாகப் பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை மற்றும் தேசிய எழுத்தறிவு திட்டம் குறித்த பயனுள்ள பல விவரங்களைப் பெறலாம். இத்தளத்தைப் பின்தொடர கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.education.gov.in/

விவசாயத்திற்கான மத்திய அரசின் இணையதளம்!

விவசாயம் குறித்த அனைத்துத் தகவல்கள் மற்றும் தரவுகளைத் தரும் தளமாகவும், விவசாயிகளுக்குப் பயனுள்ள தளமாகவும் மத்திய அரசின் அக்ரிவெல்பேர் என்ற இணையதளம் உள்ளது. இத்தளத்திற்குச் சென்று விவசாயம் சார்ந்த பயன்களைப் பெற கீழே உள்ள இணைப்பைப் பின்தொடரவும்.

 https://agriwelfare.gov.in/

Tuesday, 28 May 2024

போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியல்!

நாடு முழுவதும் செயல்படும் போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலைப் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. இப்படி பட்டியலைத்தான் வெளியிடுவார்கள் போலிருக்கிறது. நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் போல. படிக்கும் மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிமாநிலங்களில் படிக்க செல்வோர் இப்போலிப் பல்கலைக்கழகங்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள போலிப் பல்கலைக்கழகங்கள் குறித்த பட்டியலை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைப் பின்தொடரவும்.

 https://www.ugc.gov.in/universitydetails/Fakeuniversity

புதிய பொருளாதாரக் கொள்கையும் கல்வித் துறையும்!

புதிய பொருளாதாரக் கொள்கை 1991 இல் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது நிதியமைச்சராக இருந்தவர் மன்மோகன்சிங்.

புதிய பொருளாதாரக் கொள்ளை உலகமயமாக்கல், தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல் ஆகிய கொள்கைகளைப் பிரதானமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது. அதன் தாக்கம் நாட்டின் பல்வேறு துறைகளிலும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு 35 ஆம் ஆண்டை நெருங்கும் வேளையில் பல்வேறு அரசுத் துறைகளிலும் நிரந்தர தொழிலாளர்கள் குறைந்து ஒப்பந்த மற்றும் தற்காலிகத் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர்.

குறிப்பாகக் கல்வித் துறையில் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு முன்பு நாடு முழுவதும் அரசு கல்வி நிறுவனங்களே அதிகம் இருந்தன. தற்போது தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் அரசு கல்வி நிறுவனங்களை விட அதிகதித்து விட்டன.

உதாரணத்திற்குக் கூற வேண்டும் என்றால் 1980களில் தமிழ்நாட்டில் 51 அரசுக் கல்லூரிகள் இருந்தன. அப்போது சுயநிதிக் கல்லூரிகளே இல்லை. 2023 ஆம் ஆண்டு வாக்கில் இந்த எண்ணிக்கையானது 163 அரசுக் கல்லூரிகள் என்ற எண்ணிக்கையையும் 633 சுயநிதிக் கல்லூரிகள் என்ற எண்ணிக்கையையும் எட்டியுள்ளது. கிட்டதட்ட அரசு கல்லூரிகளை விட சுயநிதிக் கல்லூரிகள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளன.

கல்வித் துறைகளில் நிரந்தரப் பணியிடங்களாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் இன்று ஒப்பந்த முறையிலும் தற்காலிக முறையிலும் மாற்றம் பெற்றிருக்கின்றன. குறிப்பாகக் கல்லூரிகளில் பணி நிரந்தரம் பெற்று பணியாற்றும் பணியாளர்களை விட கௌரவ (அதென்ன கௌரவமோ?) விரிவுரையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறையிலும் ஒப்பந்த மற்றும் தற்காலிக ஆசிரியர்களின் எண்ணிக்கை இனி வரும் ஆண்டுகளில் பணி நிரந்தரம் பெற்ற ஆசிரியர்கள் எண்ணிக்கையை விட அதிகரிக்கக் கூடும்.

மேலும் இதன் தாக்கமானது பணி பாதுகாப்பிலும் எதிர்மறையாகப் பிரதிபலித்துள்ளது. அரசு பணியாளர்கள் ஓய்வூதியப் பலன்களை இழந்து புதிய ஓய்வூதிய முறையில் இணைக்கப்படுகின்றனர். கல்வித் துறையை மட்டுமல்லாது இதன் தாக்கம் ராணுவத்தையும் விட்டு வைக்கவில்லை. இராணுவத்திலும் ஒப்பந்த அடிப்படையில் அக்னிவீரர்களைத் தேர்ந்தெடுத்து நியமிக்கும் வகையில் புதிய பொருளாதாரக் கொள்ளை பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

இன்னும் மூன்று நாட்கள் வெப்ப அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் இன்னும் மூன்று நாட்களுக்கு வெப்பம் அதிகரித்தபடி இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இன்று (28.05.2024) அதிகபட்ச வெப்பநிலையாகச் சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படிக்க விருப்பமா?

பாரதிதாசன் பல்கலைக்கழகம் 2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை படிப்புகள் மற்றும் ஐந்தாண்டுகளுக்கான ஒருங்கிணைந்த படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயில விரும்புவோர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கவும், மேலதிக விவரங்களைப் பெறவும் கீழே உள்ள இணைப்பைப் பின்தொடரவும்.

 https://oms.bdu.ac.in/admissions/

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் படிக்க விருப்பமா?

சென்னை, தரமணி, சி.ஐ.டி. வளாகத்தில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் முதுகலைத் தமிழ் மற்றும் ஐந்தாண்டுகளுக்கான ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் பயில விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைப் பின்தொடரவும்.

 https://ulakaththamizh.in/

Monday, 27 May 2024

புதிய PSTM படிவம்!

தமிழ் வழியில் பயின்றோருக்கான புதிய PSTM படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.tnpsc.gov.in/static_pdf/ci_related_documents/FORMATS_PSTM.pdf

குரூப்-2, 2ஏ மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம்!

குரூப்-2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் வெளியீடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தைப் பார்வையிட கீழே உள்ள இணைப்பைத் தொடரவும்.

 https://www.tnpsc.gov.in/English/scheme.html

Sunday, 26 May 2024

D.T.Ed. க்கு விண்ணப்பிக்க…

2024 – 2025 ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கப்பள்ளி ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கவும் அது குறித்த விவரங்கள் அறியவும் கீழே உள்ள இணைப்பைத் தொடரவும்.

https://scert.tnschools.gov.in/admission/instructions


ஐந்தாம் இடம் பிடித்த இந்தியப் பங்கு சந்தை!

சந்தை மதிப்பின் அடிப்படையில் இந்தியப் பங்குச் சந்தையானது 5 டிரில்லியன் டாலர் மதிப்பைக் கடந்து உலகளவில் ஐந்தாவது மிகப்பெரிய சந்தை என்ற இடத்தைப் பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் இருக்கும் பங்குச் சந்தைகள் எவையெனக் கீழே உள்ள அட்டவணையில் காண்போம்.

இடம்

நாடு

சந்தை மதிப்பு

முதல் இடம்

அமெரிக்கா

55.65 டிரில்லியன் டாலர்

இரண்டாம் இடம்

சீனா

9.40 டிரில்லியன் டாலர்

மூன்றாம் இடம்

ஜப்பான்

6.42 டிரில்லியன் டாலர்

நான்காம் இடம்

ஹாங்காங்

5.47 டிரில்லியன் டாலர்

ஐந்தாம் இடம்

இந்தியா

5 டிரில்லியன் டாலர்

ஒரு டிரில்லியன் டாலர் என்பது ஒரு லட்சம் கோடியைக் குறிக்கும்.

(தகவல் மே 2024 அன்றைய நிலையின் அடிப்படையில்)

Saturday, 25 May 2024

பரபரப்பைக் கிளப்பும் ‘தி க்ருக்டு டிம்பர் ஆப் நியூ இந்தியா’

இப்போதைய பரபரப்பான புத்தகம் என்றால் அது ‘தி க்ருக்டு டிம்பர் ஆப் நியூ இந்தியா’ என்ற புத்தகம்தான். இதை எழுதியவர் பரகலா பிரபாகர்.

யார் இந்த பரகலா பிரபாகர்? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர்தான் பரகலா பிரபாகர்.

இந்தப் புத்தகம் பரபரப்பைக் கிளப்ப காரணம் என்ன? அரசின் பொருளாதார மற்றும் நிதிக் கொள்கைகளை மிகக் காரசாரமாக அந்த நூலில் விமர்சித்திருக்கிறார் பரகலா பிரபாகர். அதுவும் நிதியமைச்சரின் கணவர் என்றால் பரபரப்பு இருக்காதா என்ன?

அப்படி என்னதான் அந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார் பரகலா பிரபாகர்? அதற்கு நீங்கள் முழு புத்தகத்தையும் படிக்க வேண்டும். சான்றுக்குச் சிலவற்றை மட்டும் காண்போமா?

நாட்டில் ஒரு சதவீதம் பேர் 25 சதவித வருமானத்தை எடுத்துக் கொள்கின்றனர், அத்துடன் 40 சதவீத சொத்துகளைத் தங்களிடம் வைத்திருக்கின்றனர் என்கிறார் பரகலா பிரபாகர்.

25 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு விட்டால் ஏன் இன்னும் இலவச ரேஷன் அரிசியை விநியோகிக்கிறார்கள்? என்ற கேள்வியை எழுப்பி ஆட்சியாளர்கள் வறுமைக்காக நிர்ணயித்திருக்கும் அளவுகோலே தவறானது என்று அடித்துச் சொல்கிறார்.

பொருளாதாரத்தில் நாம் இங்கிலாந்தை விட முன்னேறி விட்டோம் என்றால் நாம் வளர்ந்த நாடுதானே. ஆனால் நாம் ஏன் இன்னும் வளரும் நாடாகவே இருக்கிறோம்? என்று அவர் எழுப்பும் கேள்வியும் முக்கியமானது.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருக்கும் டபுள் இன்ஜின் சர்க்கார் என்ற கருத்தாக்கத்தை ஆட்சியாளர்கள் முன் வைக்கின்றனர் என்றும், அப்போதுதான் மாநில அரசுக்கு நிதி கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கின்றனர் என்றும் விமர்சிக்கிறார்.

பரகலா பிரபாகர் இப்படிச் சொல்கிறாரே! அப்படியானால் நாட்டில் நல்ல பல விசயங்களே இல்லையா? அதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டாமா? என்ற கேள்விக்கு, இதயம் பலகீனமாக இருக்கும் போது உடலில் உள்ள மற்ற உறுப்புகள் பலமாக இருந்து என்ன பயன்? என்று எதிர்கேள்வி கேட்கிறார் பரகலா பிரபாகர்.

வாய்ப்பு கிடைத்தால் இந்த நூலைப் படித்துப் பாருங்கள்.

மனைவி நிதியமைச்சர் என்றாலும் அதற்காக எந்த வித சமரசமும் இன்றி தற்போதைய இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் நிதி நிர்வாகம் பற்றிய நூலை எழுதியிருக்கும் பரகலா பிரபாகர் பாரட்டிற்கு உரியவர்தானே.

அதிக நேர அலைபேசி பயன்பாடு ஏற்படுத்தும் அபாயங்கள்!

அதிக நேர அலைபேசி (செல்போன்) பயன்பாடு உடல் ரீதியாக, மன ரீதியாகப் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கல்வியிலும் கவனச்சிதறல் அதிகமாக ஏற்படுவதற்கு அதிக நேர அலைபேசி பயன்பாடு காரணமாக இருக்கிறது.

நீண்ட நேரம் அலைபேசியில் நேரத்தைக் கழிக்கும் குழந்தைகளின் உறக்கம் கெடுகிறது. உறக்க நேரம் குறைவது பலவித உடல் உபாதைகளை உருவாக்குகிறது.

அரை மணி நேரம் அலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது என்றாலும் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுகிறது.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பல நாடுகளிலும் அதிக நேர அலைபேசி பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

2018 ஆம் ஆண்டில் பிரான்சில் பள்ளிகளில் அலைபேசி பயன்படுத்த தடை விதித்து விட்டார்கள்.

நெதார்லாந்தில் 2024 ஆம் ஆண்டிலிருந்து பள்ளிகளுக்கு மாணவர்கள் திறன்பேசி (ஸ்மார்ட்போன்) எடுத்துச் செல்ல தடை விதித்திருக்கிறார்கள். பின்லாந்திலும் இதே போன்ற சட்டத்தை இயற்றியிருக்கிறார்கள்.

அலைபேசியைப் பிடுங்கி வைத்துக் கொண்ட அம்மாவைக் கத்தியைக் காட்டி மிரட்டிய மகள், அலைபேசியைக் கொடுக்கா விட்டால் வீட்டை விட்டு ஓடி விடுவதாக உணர்ச்சிபூர்வமாக பயமுறுத்திய மகன், அலைபேசியில் அதிகம் பேசக் கூடாது என்று கண்டித்தற்காக அண்ணனைக் கொலை செய்த தங்கை என்று நிறைய செய்திகளைக் கேள்விபடும் போது அதிக நேர அலைபேசி பயன்பாடு உருவாக்கும் அபாயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வளரிளம் பருவத்தில் இருப்போர் அதிகமாக அலைபேசியைப் பயன்படுத்துவதால் மனச் சிதைவுக்கு ஆளாகிறார்கள்.

இணைய வழி மிரட்டல் (சைபர் புல்லிங்), இணைய வழி அச்சுறுத்தல் (சைபர் ஸ்டாக்கிங்) போன்ற பிரச்சனைகளையும் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள்.

அதிக நேரம் அலைபேசியில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகள் வாழ்வியல் திறன்களில் பின்தங்கி விடுகிறார்கள். அவர்கள் படைப்பாற்றல், பிறர் கோணத்திலிருந்து பார்த்துப் புரிந்து கொள்ளுதல், மன இறுக்கத்தைச் சரியாக நிர்வகித்தல், பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றல், சக மனிதர்களோடு நல்லுறவு, தகவல் தொடர்பு திறன், தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் திறன் போன்றவற்றில் பின்தங்கி விடுகிறார்கள்.

நம் நாட்டிலும் அதிக நேர அலைபேசி பயன்பாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முன்னெடுப்புகள் குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு முன்பாக நாமே விழிப்புணர்வாகத் தேவையான கட்டுபாடுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்தானே. அதுவும் குறிப்பாகக் குழந்தைகள் அதிக நேரம் அலைபேசிப் பயன்படுத்துவதை அளவாக்கிக் கொள்வதற்கான நடைமுறைகளை உருவாக்கிப் பின்பற்றலாம்தானே!

ஏன் புதிய வருமான வரி முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது?

பழைய வருமான வரி முறையில் அடிப்படை வரி விலக்கு இரண்டரை இலட்சம் என்றால் புதிய வருமான வரி முறையில் அது மூன்று லட்சமாக உள்ளது.

அத்துடன் நிலைக்கழிவு ஐம்பதாயிரம் அனுமதிக்கப்படுகிறது.

இதனால் வரிக்கு உட்பட்ட வருமானமானது நிலைக்கழிவு போக ஏழு லட்சம் வரை இருந்தால் வருமான வரி இல்லை.

மேலும் 87A இன் படி வரிக்கு உட்பட்ட வருமானம் ஏழு லட்சத்திற்கு உட்பட்டு இருந்தால் ரூ. 25,000/- வரித் தள்ளுபடியையும் பெற முடியும்.

இது போன்ற காரணங்களால்தான் பழைய வருமான வரி முறையை விட புதிய வருமான வரி முறை சிறந்ததாக இருக்கிறது.

Friday, 24 May 2024

ஏன் மௌனம் காக்கிறோம்?

சரியாகக் குரல் கொடுக்க வேண்டிய நேரங்களிலும் நாம் மௌனம் காத்து விடுகிறோம். இது ஏன் தெரியுமா?

சண்டை சச்சரவில்லா அமைதியை விரும்பி மௌனம் காக்கிறோம்.

எதிராளி எந்த அளவுக்குத் திருப்பி அடிப்பார் என்பதை மனதில் கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வதாக நினைத்து மௌனம் காத்து விடுகிறோம்.

நம்முடைய வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்று நினைப்பினாலும் மௌனம் காக்கிறோம்.

இதைச் சொன்னால் நம்மை மிகவும் சின்னத்தனமாக நடந்து கொள்வதாக நினைப்பார்களோ என்று எண்ணிக் கொண்டும் மௌனம் காக்கிறோம்.

ஒரு குழுவாக இயங்கும் போது இதைச் சொல்வதால் நம்மை ஒரு நல்ல குழு உறுப்பினர் இல்லை என்று நினைத்து விடுவார்களோ என்று யோசித்தும் மௌனம் காக்கிறோம்.

இதைப் போய் சொல்லி என்னவாகப் போகிறது என்ற எண்ணத்தாலும் மௌனம் காக்கிறோம்.

அப்படிச் சொல்வது நம்மைச் சோர்வடையச் செய்யும் என்ற எண்ணத்தாலும் மௌனம் காக்கிறோம்.

அது நம்மை இழிவாகக் காட்டி விடுமோ என்று நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட மனோநிலையாலும் மௌனம் காக்கிறோம்.

இப்படி மௌனம் காத்தலால் என்ன நேரிடும் என்கிறீர்களா?

உங்களது உரிமையை நிலைநாட்ட முடியாமல் போகலாம்.

அதிக வேலையைச் சுமக்க நேரிடலாம்.

வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையே சமநிலை இல்லாமல் போய் விடும் நிலை ஏற்படலாம்.

அறமற்றதை ஏற்க நேரிடலாம்.

குற்றங்களுக்கு உடந்தையாக வேண்டிய நிலை ஏற்படலாம்.

குற்ற உணர்ச்சியால் அவதிப்பட நேரிடலாம்.

மனப்புழுக்கத்தால் நொந்து போகும் நிலைக்கு ஆளாகலாம்.

ஆகவே உங்கள் எண்ணத்தை, உங்கள் உணர்வை அமைதியான குரலில் எப்போதும் வெளிப்படுத்துங்கள். அப்படி வெளிப்படுத்தப் பழகுங்கள்.

அப்படியானால் மௌனம் காக்க வேண்டிய சூழ்நிலைகள் இல்லையா என்றால் இருக்கிறது. அது எப்போது?

எப்போது மௌனம் காக்கலாம்?

மௌனமாய் இருப்பது என்பது பிழைத்து வாழ்வதற்கான ஒரு நுட்பம்.

வேலையும் சம்பளமும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத் தவிர எந்த எண்ணமும் இல்லாதவர்கள் இந்த நிலையைப் பின்பற்றலாம்.

இருப்பதே போதும் என்று நினைக்கும் போது மௌனம் காக்கலாம்.

பிஎஸ்சி நர்சிங் - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பிஎஸ்சி நர்சிங், பி பார்ம் உள்ளிட்ட 19 மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பப் பதிவு செய்யலாம். ஜூன் 21 வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும் மேலதிக தகவல்களுக்கும் கீழே உள்ள இணைப்பைப் பின்தொடரவும்.

 https://tnmedicalselection.net/

பெற்றோர்கள் ஆன்டிராய்டு செல்போன் வாங்க கல்வித்துறை அறிவுறுத்தல்!

பிள்ளைகளின் கல்விச் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ள குறைந்த விலை ஸ்மார்ட் போன்களையாவது வாங்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோருக்குக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களின் கல்வி செயல்பாடுகளை பெற்றோருக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 80 லட்சத்து 30 ஆயிரம் பெற்றோர்களின் மொபைல் எண்களை உறுதி செய்துள்ளது கல்வித்துறை. இந்த மாதத்திற்குள் ஒரு கோடியே 25 லட்சம் மொபைல் எண்களும் உறுதி செய்யப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதற்கான பணிகளை ஆசிரியர்கள் பெற்றோர்களின் அலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு ஒரு முறை கடவுச்சீட்டு பெற்று உறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Thursday, 23 May 2024

ஏன் குரல் கொடுக்க வேண்டும் தெரியுமா?

நம்முடைய நலனுக்காகவும், நம்மைச் சுற்றி இருப்பவர்களின் நலனுக்காகவும் குரல் கொடுத்தே ஆக வேண்டும்.

நீங்களே உங்களுக்கு அநீதி நடக்கும் போது உங்களுக்காகச் சண்டை போடா விட்டால் வேறு யார் உங்களுக்காகச் சண்டை போடுவார்கள்? குரல் கொடுப்பதும் அப்படித்தான்.

உங்கள் அநீதிக்காக நீங்கள் சண்டை போடா விட்டாலும் குரல் கொடுக்காவது செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு நடக்கும் அநீதி வெளியில் தெரியும். உங்களுக்கு நடக்கும் அநீதி வெளியே தெரிந்தால்தான் அதற்கு நியாயம் கிடைக்க ஒரு வழி வெளியிலிருந்து கிடைக்கும்.

குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் மௌனமாக இருக்க பழகி விட்டால் நமக்கென்று ஓர் அடையாளம் இல்லாமல் போகும். அதுவே பழக்கமாகவும் ஆகிப் போகும். உங்களுக்கு எதிராக உங்களுக்கு வன்கொடுமையும் அநீதியும் புரிபவர்களுக்கு அதுவே ஒரு வாய்ப்பாகவும் ஆகிப் போகும்.

நாள்பட இதே நிலை தொடரும் போது எதையும் எதிர்த்துப் பேசுவது என்பதே மிகவும் அசௌகரியமான நிலையாகி விடும்.

குரல் கொடுப்பது என்பது மிகவும் கடினமான காரியம் என்றும் மனதில் தோன்ற ஆரம்பித்து விடும்.

நம் நலம் மற்றும் பாதுகாப்புக் கருதி மௌனமே நம் பாதையாய் மாறி விடும்.

அவசியமானவற்றிற்காகவும், நமது நலத்திற்காகவும் குரல் கொடுத்து நாம் பழகியே ஆக வேண்டும்.

குரல் கொடுங்கள். உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.

*****