Sunday, 2 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 03.02.2025 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ கருவூல மற்றும் கணக்கியல் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

2) திருவாரூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராகச் சிவ சவுந்தரவள்ளி புதன் கிழமை அன்று பதவியேற்ற உள்ளார்.

3) இல்லம் தேடிக் கல்வியால் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

4) சமூகங்களுக்கு இடையேயான இணைப்புப் பாலங்கள் புத்தகங்கள் என்று குடியரசுத் தலைவர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

5) நாட்டின் வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தார். இதன் மதிப்பு 50 லட்சம் கோடியாகும்.

6) நிதியமைச்சர் “வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழும் குடி” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார்.

7) நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் 1.28 லட்சம் கோடி கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பள்ளிக் கல்விக்கு 50 ஆயிரம் கோடியும், உயர்கல்விக்கு 78 ஆயிரம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8) 12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

9) நாட்டின் வரவு – செலவுத் திட்டத்தில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகத் தமிழக முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.

10) நாட்டின் வரவு – செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்துள்ளது.

English News

1) Thiruvarur District Collector T. Charusree has been transferred as the Director of Treasury and Accounts.

2) Shiva Soundaravalli will take charge as the new District Collector of Tiruvarur district on Wednesday.

3) The Economic Survey of the Central Government has said that the learning capacity of students has increased due to ‘Illam Thedi Kalvi’.

4) The President inaugurated the International Book Fair and said that books are bridges between communities.

5) Finance Minister Nirmala Sitharaman presented the country's budget in Parliament. Its value is 50 lakh crores.

6) The Finance Minister quoted the Thirukkural "Vanokki vaazhum ulakellam mannavan konokki vazhum gudi".

7) Rs 1.28 lakh crores have been allocated for education in the country's budget. Of this, Rs 50 thousand crores have been allocated for school education and Rs 78 thousand crores for higher education.

8) Income tax exemption has been given for income up to 12 lakhs.

9) The Chief Minister of Tamil Nadu has expressed his opinion that Tamil Nadu has been neglected in the national budget.

10) In response to the presentation of the national budget, the price of gold has increased by 480 rupees per sovereign.

No comments:

Post a Comment