Sunday, 23 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 24.02.2025 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் எனத் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

2) தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் நாட்டிலேயே இரண்டாம் இடம் வகிக்கிறது.

3) கடலூரில் நடைபெற்ற பெற்றோரைக் கொண்டாடுவோம் நிகழ்வில் ‘அப்பா’ செயலி வெளியிடப்பட்டது.

4) தமிழ்நாடு முழுவதும் 86,271 பேருக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

5) கடந்த முப்பது ஆண்டுகளில் 66,000/- கோடி ரூபாய் நட்டத்தைத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சந்தித்துள்ளது.

6) நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

7) சமூக ஊடகப் பதிவுகளை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

8) தமிழகத்தில் பிப்ரவரி 25 முதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9) விரைவில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்திக்க உள்ளனர்.

English News

1) Tamil Nadu Chief Minister has said that he will not accept the three-language policy even if he is given ten thousand crores.

2) Tamil Nadu ranks second in the country in providing quality education.

3) The ‘Appa’ app was launched at the ‘Celebrate Parents’ event held in Cuddalore.

4) Deputy Chief Minister Udhayanidhi Stalin has said that 86,271 people across Tamil Nadu will soon be given Patta.

5) The Tamil Nadu State Transport Corporation has incurred a loss of Rs. 66,000/- crore in the last thirty years.

6) Shipping from Nagapattinam to Sri Lanka has resumed.

7) The central government is considering a new law to regulate social media posts.

8) The Meteorological Department has said that there is a possibility of rain in Tamil Nadu from February 25.

9) Russian President Vladimir Putin and US President Donald Trump are set to meet soon.

No comments:

Post a Comment