வாரன் பப்பெட் எப்படி முதலீடு செய்கிறார் தெரியுமா?
உலகெங்கும்
இருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஆதர்சம் வாரன் பப்பெட்.
அவர்
எப்படி முதலீட்டாளர்களில் முதல்வரானார்?
அதன்
ரகசியங்கள் தெரிந்தால் எல்லாரும் முதலீட்டில் மன்னர்கள் ஆகலாம் அல்லவா! பப்பெட்டின்
முதலீட்டு ரகசியங்களை இங்குக் காண்போமா?
எளிதில்
புரிந்து கொள்ளக் கூடிய வணிகங்களில் மட்டுமே வாரன் பப்பெட் முதலீடு செய்கிறார்.
ஒரு
நிறுவனம் எவ்வாறு பணம் சம்பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால் அதன்
எதிர்கால செயல்திறனை எப்படி உங்களால் கணிக்க முடியும்?
ஆகையால்
சிக்கலான அல்லது வேகமாக மாறி வரும் தொழில்களைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக நுகர்வோர்
பொருள்கள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போன்ற தெளிவான வணிக மாதிரிகளைக்
கொண்ட நிறுவனங்களில் கவனம் செலுத்துகிறார் பப்பெட்.
வாரன்
பப்பெட் ஒரு நீண்ட கால முதலீட்டாளர்.
ஆகையால்
அவர் குறுகிய கால ஆதாயம் தரும் முதலீடுகளை ஒரு போதும் விரும்ப மாட்டார்.
எங்களுக்குப்
பிடித்த முதலீட்டுக் காலம் என்றென்றும் முடிவற்றது என்கிறார் அவர்.
ஒரு
நிர்வாகத்தின் நம்பகத்தன்மை மற்றும் திறமையை முக்கியமானதாகக் கருதுகிறார் பப்பெட்.
அப்படிப்பட்ட
நிர்வாகமும் திறமையும் கொண்ட நிறுவனங்களிலே அவர் முதலீட்டுப் பயணம் மேற்கொள்கிறார்.
கடன்
சில நேரங்களில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்றாலும் பொருளாதார வீழ்ச்சியின்
போது அபாயங்களை ஏற்படுத்தும்.
ஆகவே,
குறைவான அல்லது கடன் இல்லாத நிறுவனங்களே முதலீட்டுக்குச் சரியானவை. அப்படிப்பட்ட முதலீடே
பப்பெட்டுக்கு பிடித்தமானது.
உள்ளார்ந்து
மதிப்புக்குக் குறைவாக வர்த்தமாகும் தரமான மற்றும் சரியான பங்குகளில் மட்டுமே பப்பெட்
முதலீடு செய்கிறார்.
உள்ளார்ந்த
மதிப்புக்குக் கூடுதலாக வர்த்தமாகும் எந்தப் பங்குகளிலும் அவர் எப்போதும் முதலீடு செய்வதில்லை.
வாரன்
பப்பெட் ஆக வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொருவரும் அவரது இந்த முதலீட்டு அணுகுமுறைகளைக்
கடைபிடிப்பது அவரைப் போலவே மாறுவதற்கு உதவும்.
இந்தத்
தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.
இது
போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.
நன்றி!
வணக்கம்!
*****
No comments:
Post a Comment