சூரிய கிரகணம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது சூரிய கிரகணம்?
சூரிய
கிரகணம், சந்திர கிரகணம் என இரு வகை கிரகணங்கள் பூமியில் ஏற்படுகின்றன. இவ்விரு கிரகணங்களில்
சூரிய கிரகணம் பற்றி இங்கு காண்போம்.
கிரகணம் :
கிரகணம்
என்பது வானியல் நிகழ்வாகும்.
ஒளியின்
நேர்க்கோட்டு பண்பினால் இது ஏற்படுகிறது.
நேர்க்கோட்டில்
செல்லும் ஒளியை மறைப்பதால் நிழல் உருவாகிறது.
உதாரணமாக,
சூரியன் கிழக்கில் இருக்கும் போது சூரிய ஒளியை நீங்கள் மறைந்து நின்றால் உங்கள் நிழல்
மேற்கில் விழுகிறது இல்லையா!
அதே
போல சூரியனைச் சந்திரனை மறைக்கிறது என்றால் அதன் நிழல் பூமியில் விழும் போது என்னவாகும்?
அந்த
இடம் இருட்டாகும்.
அவ்விடத்தில்
இருப்போரால் சூரியனைப் பார்க்க இயலாத நிலை ஏற்படும். இதுவே கிரகணம்.
இங்கு
சூரியனைப் பார்க்க முடியாததால் அது சூரிய கிரகணம்.
அதுவே
சந்திரனைப் பார்க்க முடியாமல் பூமியின் நிழல் சந்திரன் மேல் விழுந்தால் அது சந்திர
கிரகணம்.
ஆகக்
கிரகணம் என்பது வானியல் பொருட்கள் சூரிய ஒளியை மறைப்பதால் ஏற்படும் நிழலால் ஏற்படுகிறது.
எதை
நம்மால் பார்க்க முடியவில்லையோ, அதன் பெயரால் கிரகணத்தின் பெயர் வழங்கப்படுகிறது. உதாரணமாகச்
சூரியனைப் பார்க்க முடியவில்லை என்றால் அது சூரிய கிரகணம், சந்திரனைப் பார்க்க முடியவில்லை
என்றால் அது சந்திர கிரகணம்.
சூரிய கிரகணம் என்றால் என்ன?
சூரியனுக்கும்
பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது, சந்திரனின் நிழல் பூமியில் விழுகிறது. இதனால்
சூரியனைப் பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. இது சூரிய கிரகணம் எனப்படும். இது கதிரவ
மறைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
சூரிய கிரகணம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?
சூரியனுக்கும்
பூமிக்கும் இடையில் நிலவு வருவதே சூரிய கிரகணம் ஏற்படக் காரணம். இதனால் சூரிய ஒளி பூமியில்
விழாமல் சந்திரனால் மறைக்கப்படுகிறது. சூரிய ஒளியைச் சந்திரன் மறைப்பதால் அதன் நிழல்
பூமியில் விழுகிறது. இதனால் சூரியனைப் பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.
சூரிய கிரகணத்தின் வகைகள் யாவை?
சூரிய
கிரகணம் தோன்றும் வகையின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவையாவன,
1. முழு சூரிய கிரகணம்
இது
ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுகிறது.
2. வளைய சூரிய கிரகணம்
இது
ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுகிறது.
3. பகுதி சூரிய கிரகணம்.
இது
ஆண்டுக்கு இரு முறை ஏற்படுகிறது.
சூரிய கிரகணம் ஏற்படுவதற்கான நிபந்தனை என்ன?
சூரிய
கிரகணம், சூரியனுக்கும் புவிக்கும் இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது
மட்டுமே ஏற்படும். இதுவே அதற்கான நிபந்தனை.
சூரிய கிரகணம் எப்போது ஏற்படும்?
அமாவாசை
அன்றுதான் ஏற்படும்.
ஓராண்டில் எத்தனை சூரிய கிரகணங்கள் ஏற்படும்?
இரண்டு
முதல் ஐந்து சூரிய கிரகணங்கள் ஏற்படலாம். சில ஆண்டுகளில் சூரிய கிரகணம் ஏற்படாமலும்
போகலாம்.
2025 இல் சூரிய கிரகணம் எப்போது ஏற்படும்?
மார்ச்
29, செப்டம்பர் 21 ஆகிய தேதிகளில் சூரிய கிரணம் ஏற்படும். இக்கிரகணங்கள் பகுதி சூரிய
கிரகணங்கள்.
சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் காணலாமா?
சூரிய
கிரகணத்தை வெறும் கண்ணால் காணக் கூடாது. இதற்கென உள்ள சிறப்புக் கண்ணாடிகள் அணிந்து
சிறிது நேரம் பார்க்கலாம். தற்காலத்தில் சூரிய கிரகணங்கள் நிகழும் காலத்தே நேரடி ஒளிபரப்பாகச்
செய்யப்படுவதால் தொலைக்காட்சிகளில் அதைப் பார்ப்பது நல்லது.
*****
No comments:
Post a Comment