இன்றைய கல்வி & பொதுஅறிவுச்
செய்திகள் – 14.02.2025 (வெள்ளி)
பள்ளி காலை
வழிபாட்டு நிகழ்வுக்கான
தமிழ் மற்றும்
ஆங்கிலச் செய்திகள்!
தமிழ்ச் செய்திகள்
1) எந்தவொரு குழந்தைக்கும்
கல்வி புகட்டுவதில் பாகுபாடு இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2) சென்னை,கோட்டூர்புரம்,
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாநில அளவிலான வானவில் மன்ற போட்டிகளைப் பள்ளிக்கல்வித்
துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவங்கி வைத்தார்.
3) மத்திய அரசு நிதி
வழங்காத்தால் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில்
மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
4) நாட்டில் தற்கொலைகள்
அதிகரித்திருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
5) தமிழ்நாட்டில்
அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்து தலைமைச்செயலாளர்
நா.முருகானந்தம் ஆலோசனை நடத்தினார்.
6) சென்னையில் ஆளுநரைச்
சந்தித்துப் பேசினார் கைலாஷ் சத்தியார்த்தி. இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
மற்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பிற்காகப் போராடி வருபவர் ஆவார்.
7) தேர்தல் வாக்குறுதிகளில்
வழங்கப்படும் இலவசங்கள் குறித்து உச்சநீதி மன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
8) புதிய வருமான வரி
மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
9) தேர்தல் இலவசங்களால்
மக்கள் உழைக்க தயாராக இல்லை என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.
10) சென்னையில் முதல்
குளிர்சாதன புறநகர் மின்சார தொடர்வண்டி விரைவில் இயக்கப்பட உள்ளது.
11) அதிநவீன அணு உலைகளை உருவாக்க இந்தியாவும் பிரான்சும் ஒப்பந்தம்
செய்துள்ளன.
12) ஊழல் குறைந்த
நாடுகளில் டென்மார்க் முதலிடத்தையும், பின்லாந்து இரண்டாமிடத்தையும், சிங்கப்பூர் மூன்றாமிடத்தையும்,
இந்தியா 96 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.
English News
1) The Supreme Court has said that
there should be no discrimination in providing education to any child.
2) School Education Minister Anbil
Mahesh Poiyamozhi launched the state-level Vanavil Mandram competitions at the
Anna Centenary Library in Kotturpuram, Chennai.
3) Minister Anbil Mahesh Poiyamozhi
has said that the future of 40 lakh students is affected if the central
government does not provide funds.
4) Governor R.N. Ravi has expressed
anguish over the increase in suicides in the country.
5) Chief Secretary N. Muruganantham
held a meeting on the increasing sexual abuse against children in Tamil Nadu.
6) Kailash Satyarthi met the Governor
in Chennai. He is a Nobel Peace Prize winner and a campaigner for the abolition
of child labor.
7) The Supreme Court has expressed
strong dissatisfaction with the freebies given in election promises.
8) The new Income Tax Bill was tabled
in the Lok Sabha.
9) The Supreme Court has said that
people are not willing to work due to election freebies.
10) The first air-conditioned
suburban electric train will be launched in Chennai soon.
11) India and France have signed an
agreement to build powerful nuclear reactors.
12) Denmark has ranked first, Finland
second, Singapore third and India 96th among the least corrupt countries.
No comments:
Post a Comment