Thursday, 20 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 21.02.2025 (வெள்ளி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும் பள்ளிக் கல்வியின் அனைத்து கல்வித் திட்டங்களும் தொடரும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2) அரசுப் பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கையைத் தொடங்குமாறு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

3) ஆசிரியர் மாணவர் நலன் கருதி 2152 கோடி கல்வி நிதியை விடுவிக்குமாறு பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

4) கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் வருகைப் பதிவு குறைவாக உள்ள மாணவர்களைத் தேர்வெழுத அனுமதிக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5) இந்தித் திணிப்பு வேண்டாம் என முதல்வர் பாரதிதாசன் பாடலை மேற்கோள் காட்டி முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

6) டில்லியின் ஒன்பதாவது முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார்.

7) சென்னைக்குத் தண்ணீர் வழங்கும் ஏரிகளில் 2 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக உள்ளது.

8) லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

9) திரிவேணி சங்கமத்தின் நீர் குளிக்க பாதுகாப்பானதாக இல்லை என மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவித்துள்ளன.

10) உக்ரைன் போருக்குக் காரணம் அந்நாட்டின் அதிபர் வினாதிமிர் செலன்ஸ்கிதான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

11) இந்தியாவின் தங்க இறக்குமதி 41 சதவீதம் அதிகரித்துள்ளது.

English News

1) Anbil Mahesh Poyyamozhi has said that all educational programs of school education will continue even if the central government does not provide funds.

2) The Department of Elementary Education has ordered that student admissions in government schools will start from March 1.

3) The Chief Minister of Tamil Nadu has written a letter to the Prime Minister to release 2152 crore education funds for the welfare of teachers and students.

4) The High Court has ordered that students with low attendance records in colleges and universities should not be allowed to write exams.

5) The Chief Minister has requested, quoting the song Bharathidasan, not to impose Hindi.

6) Rekha Gupta took oath as the ninth Chief Minister of Delhi.

7) There is 2 TMC of excess water in the lakes that supply water to Chennai.

8) Retired Justice Rajamanickam has been appointed as the Chairman of the Lok Ayukta.

9) The water of Triveni Sangam is not safe for bathing, according to the Central Pollution Control Board data.

10) US President Donald Trump has blamed the Ukraine President Vladimir Zelensky for the war in Ukraine.

11) India's gold imports have increased by 41 percent.

No comments:

Post a Comment