Thursday, 27 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 28.02.2025 (வெள்ளி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) இந்தியாவின் மருத்துவ தலைநகராகச் சென்னை விளங்குவதாகத் தமிழக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2) போதை மீட்பு சிகிச்சைக்கு 25 மறுவாழ்வு மையங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

3) உலக தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4) இளநிலை பொறியியல் (பி.இ.), இளநிலை கல்வியியல் (பி.எட்.) முடித்தவர்கள் பள்ளிகளில் இயற்பியல் பட்டதாரி ஆசிரியராகப் பணி புரியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5) மார்ச் 5 இல் நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு 45 அரசியல் கட்சிகளுக்குத் தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

6) கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 5000 கோடியில் புதிய தொழில்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

7) 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் 66 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

8) தெலுங்கானா மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரையில் தெலுங்குப் பாடம் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

9) தெலுங்கானாவைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் பஞ்சாபி மொழியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக அறிவித்துள்ளது.

10) பெட்ரோலில் 20 சதவீதத்திற்கு மேல் எத்தனால் கலக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

11) அமெரிக்காவில் 43 கோடி ரூபாய் முதலீடு செய்வோருக்கு தங்க அட்டை விசா வழங்கப்படும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

English News

1) The Tamil Nadu Chief Minister has expressed his pride in Chennai being the medical capital of India.

2) The Chief Minister inaugurated 25 rehabilitation centres for drug recovery treatment.

3) R. Balakrishnan has been appointed as the Chairman of the World Tamil Research Institute.

4) It has been announced that those who have completed Bachelor of Engineering (B.E.) and Bachelor of Education (B.Ed.) can work as physics graduate teachers in schools.

5) The Tamil Nadu government has invited 45 political parties to the all-party meeting to be held on March 5.

6) New industrial projects worth Rs 5,000 crore have been started in Karur and Perambalur districts.

7) 66 crore devotees took holy dip in the 45-day Maha Kumbh Mela.

8) The state government has announced that Telugu will be compulsory in all schools in the state of Telangana up to Class X.

9) Following Telangana, Punjab has also declared Punjabi as a compulsory subject in schools.

10) The central government has decided to blend more than 20 percent ethanol in petrol.

11) Donald Trump has announced that those who invest Rs 43 crore in the US will be given a golden card visa.

No comments:

Post a Comment