Wednesday, 12 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 13.02.2025 (வியாழன்)

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 13.02.2025 (வியாழன்)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) பள்ளிக் கல்விக்கான 2401 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2) தமிழகம் முழுவதும் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர்களின் விவரங்களைப் பள்ளிக்கல்வித் துறை சேகரித்து வருகிறது. புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

3) நம்பகமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அவசியம் எனப் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

4) தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5) தமிழகத்தில் முதல்வர் மருந்தகத்திற்கு விண்ணப்பித்தோரில் 840 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

6) கிராம அளவில் பெண்களுக்கான நீதிமன்றங்களை நாடு முழுவதும் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

7) தங்கம் ஒரு கிராம் விலை எட்டாயிரம் ரூபாயைக் கடந்தது. ஒரு சவரன் விலை 64 ஆயிரத்தைக் கடந்தது.

English News

1) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has said that the central government has not released Rs 2401 crore for school education.

2) The school education department is collecting details of teachers involved in sexual harassment cases across Tamil Nadu. The school education department has also decided to take strict action against the teachers involved in the case.

3) Prime Minister Narendra Modi said at a conference in France that reliable artificial intelligence technology is necessary.

4) The Meteorological Department has said that there will be dry weather in Tamil Nadu for six days.

5) 840 people have been granted licenses for the Chief Minister's dispensary in Tamil Nadu.

6) The central government has decided to set up village-level women's courts across the country.

7) The price of one gram of gold has crossed eight thousand rupees. The price of a sovereign has crossed 64 thousand.

No comments:

Post a Comment