Saturday, 22 February 2025

உங்கள் கர்மா எப்படி வேலை செய்கிறது தெரியுமா? – ஓர் எதார்த்தக் கதை!

உங்கள் கர்மா எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

– ஓர் எதார்த்தக் கதை!

நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதுவே உங்களுக்குத் திரும்ப நடக்கும்.

இது கர்மாவா என்றால், எதார்த்தம் இதுதான்.

இதை உணர்த்தும் வகையிலான கதை ஒன்றை அறிவோமா?

அவர் வீட்டுத் தொலைபேசிக் கட்டணம் அதிகமாக வந்தது.

அவர் அந்த வீட்டின் தொலைபேசியைப் பயன்படுத்துவதில்லை. அலுவலகத் தொலைபேசியைத்தான் அவரது அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படுத்துவார்.

அதனால் மனைவியைக் கூப்பிட்டு விசாரித்தார்.

அவரும் தனது அனைத்துத் தேவைகளுக்கும் அவருடைய அலுவலகத் தொலைபேசியைத்தான் பயன்படுத்தவதாகக் கூறினார்.

உடனே, மகனைக் கூப்பிட்டு விசாரித்தார்.

மகனும் அவனது அனைத்துத் தேவைகளுக்கும் அவன் வேலை பார்க்கும் அலுவலகத் தொலைபேசியைத்தான் பயன்படுத்துவதாகக் கூறினான்.

அடுத்ததாக, மகளைக் கூப்பிட்டு விசாரித்தார்.

மகளும் அவளது அனைத்துத் தேவைகளுக்கும் அவள் வேலை பார்க்கும் அலுவலகத் தொலைபேசியைத்தான் பயன்படுத்துவதாகக் கூறினாள்.

யாரும் வீட்டில் உள்ள தொலைபேசியைப் பயன்படுத்தாமல் தொலைபேசிக் கட்டணம் எப்படி வர முடியும்? அதுவும் அளவுக்கதிகமாக எப்படி வர முடியும்? என்று யோசித்தார் அவர்.

அடுத்ததாக அவர் அந்த வீட்டின் வேலைக்காரரைக் கூப்பிட்டு விசாரித்தார்.

அவர் தன்னுடைய அனைத்துத் தேவைகளுக்கும் தான் வேலை பார்க்கும் இந்த வீட்டில் உள்ள இந்தத் தொலைபேசியைத்தான் பயன்படுத்துவதாகக் கூறினார்.

அவருக்கு அவருடைய கர்மா எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்தது.

உங்கள் கர்மா எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்து கொள்ள நீங்கள் உங்களுக்கு நீங்களே ஆழ்ந்த விசாரணை செய்ய வேண்டும். அப்படி செய்தால் உங்களுக்குப் புரியும், உங்கள் கர்மா எப்படி வேலை செய்கிறது என்பது.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment