நினைத்ததை அடைய உதவும் நிபுணத்துவம்!
நீங்கள்
உங்கள் வாழ்க்கையில் நினைத்ததை எல்லாம் அடைந்து விட்டீர்களா?
நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால் பிறகு தெய்வம் எதற்கு என்கிறீர்களா?
ஒரு
மனிதர் தன் வாழ்வில் நினைப்பதையெல்லாம் அடைய முடியுமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால்
இன்றிலிருந்து அதை விட்டு விடுங்கள்.
ஏனென்றால்
நீங்கள் எந்தத் துறையில் எதை அடைய நினைக்கிறீர்களோ, அதை அடைய வழி இருக்கிறது.
அந்தத்
துறையில் நீங்கள் நிபுணத்துவம் பெற்றால் நீங்கள் நினைத்ததை அடைந்து விடுவீர்கள்.
நீங்கள்
ஒரு நிபுணர் என்பதற்கான அடையாளம் என்ன தெரியுமா?
ஒரு
வேலையில் நீங்கள் நிபுணராக இருக்கிறீர்கள் என்றால் அந்த வேலையைச் செய்வது உங்களுக்குக்
கடினமாக இருக்காது.
நீங்கள்
சுவாசிப்பதைப் போல வெகு எளிதாக அதைச் செய்வீர்கள்.
யாராவது
கஷ்டப்பட்டு சுவாசிப்பதாக சொல்லி நீங்கள் கேட்டதுண்டா என்ன?
நீங்கள்
அந்த வேலையில் நிபுணராகி விட்ட பின்பு, நீண்ட நேரம் விருப்பமாகவும் ஆர்வமாகவும் ஈடுபாட்டோடும்
வேலை செய்வீர்கள்.
நிபுணத்துவம்
உங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டே போகும். அந்தத் துறையில் உங்களை உச்சத்துக்குக்
கொண்டு போகும். அதற்குக் காரணம் நீங்கள் கண்டடைந்த எளிமையே.
எந்த
ஒரு வேலையையும் கடினப்பட்டுச் செய்ய வேண்டாம். ஏன் அப்படி என்றால்…
கடினமாக
ஒரு வேலையைச் செய்வதாக நீங்கள் நினைத்தால் உங்களுக்குள் ஓர் எதிர்ப்புணர்வு வந்துவிடும்.
உங்களையே
நீங்கள் எதிர்த்துக் கொண்டு நீங்கள் எதைச் சாதிக்க முடியும்?
மேலும்,
கடினமாக ஒரு வேலையைச் செய்யும் போது எதிர்பார்த்தபடி அது முடியாது. அதன் பலனும் நினைத்தபடி
இருக்காது.
உங்களுக்கு
ஒன்று தெரியுமா?
ஒரு
நிர்வாகமோ, தலைமையோ எவ்வளவு கடினமாக முயன்று அந்த வேலையைச் செய்தீர்கள் என்று பார்ப்பதில்லை.
அந்த
வேலை எப்படி முடிந்திருக்கிறது என்பதைத்தான் பார்க்கிறார்கள்.
இந்த
உலகம் எதை விரும்புகிறது தெரியுமா?
நான்கு
நாட்கள் கடினமாக முயன்றும் ஒரு வேலை தவறானால் அதை யார் விரும்புவார்கள்.
நான்கு
நாட்கள் வேலை அரை நாளில் மிகச் சரியாக முடிந்திருந்தால் அதைத்தான் விரும்புவார்கள்.
இந்த
உலகம் என்ன எதிர்பார்க்கிறது தெரியுமா?
ஒரு
வேலை எப்படி செய்யப்பட்டுள்ளது என்பதை பொறுத்தே அதற்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
மற்றபடி
எவ்வளவு கடினப்பட்டு செய்தீர்கள், எவ்வளவு நேரம் செய்தீர்கள் என்பதெல்லாம் இரண்டாம்
பட்சம்தான்.
இதைத்தான்
இந்த உலகம் எதிர்பார்க்கிறது.
இளையராஜா
ஒரு பாடலுக்கு ஐந்து நிமிடத்தில் இசையமைத்து விடுவார்.
இன்னோர்
இசையமைப்பாளர் மிக கடினமாக முயன்று அந்தப் பாடலுக்கு ஐந்து நாட்கள் இசையமைப்பார்.
யாருடைய
பாடலை மக்கள் விரும்புவார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இப்போது
உங்களுக்குப் புரிந்திருக்கும், ஒரு துறையில் நிபுணத்துவம் எப்படி வேலை செய்கிறது என்பது.
நிபுணத்துவம்
பெறுவதற்கு முக்கியமான கூறு ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால்,
உங்களுக்குப்
பிடித்ததைச் செய்யுங்கள். மற்றவர்களுக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாதீர்கள்.
நீங்கள்
ரசித்துச் செய்து கொண்டே போகும் எந்த ஒரு பணியிலும் நிச்சயம் உங்களால் நிபுணத்துவம்
பெற முடியும்.
நிபுணத்துவம்
பெற்று விட்டால் உங்கள் வேலையை யார்தான் விரும்பாமல் இருப்பார்கள்?
அதன்பின்
யார்தான் உங்களுக்குக் கிடைக்கப் போகும் அங்கீகாரத்தையும் புகழையும் தடுக்க முடியும்?
ஆகவே
நிபுணத்துவம் பெறுவதில் குறியாக இருங்கள். நீங்கள் குறி வைத்த அனைத்தும் அதன் பின்
தானாகவே உங்களை வந்த அடையும்.
வாழ்க்கையில்
நிபுணத்துவம் பெற்று சாதிக்க வாழ்த்துகள்!
*****
No comments:
Post a Comment