Monday, 3 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 04.02.2025 (செவ்வாய்)

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 04.02.2025 (செவ்வாய்)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) பள்ளிகளில் மணற்கேணி செயலி பயன்படுத்தப்படுவதை ஆய்வு செய்யுமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

2) பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சாரணர் இயக்கத்தின் உயரிய விருதான வெள்ளியானை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

3) தமிழ்நாடு சாரணர் இயக்கத்துக்கு 10 கோடியில் நவீன தலைமையகம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

4) ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

5) தமிழகத்தில் இதுவரை 8.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

6) தமிழகத்தில் இனி வரும் நாட்களில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7) இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே நீண்டகால கலாச்சார தொடர்பு உள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

8) சீனாவுக்கு 10 சதவீதமும் கனடாவுக்கு 25 சதவீதமும் இறக்குமதி வரியை டிரம்ப் அறிவித்துள்ளார்.

9) மகளிர் டி20 மட்டைப் போட்டியில் இந்திய மகளிர் அணி உலகச் சாதனையாளர் பட்டம் வென்றுள்ளது.

English News

1) The School Education Department has instructed to study the use of Manarkeni app in schools.

2) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has been announced the highest award of the Scout Movement, the Silver Elephant Award.

3) The Chief Minister has announced that a modern headquarters will be set up for the Tamil Nadu Scout Movement at a cost of Rs 10 crore.

4) The Erode by-election campaign ended yesterday. Voting will be held tomorrow.

5) 8.42 lakh metric tons of paddy have been purchased in Tamil Nadu so far.

6) The Meteorological Department has said that dry weather will prevail in Tamil Nadu in the coming days.

7) The Prime Minister has said that India and Indonesia have a long-standing cultural relationship.

8) Trump has announced a 10 percent import duty on China and 25 percent on Canada.

9) The Indian women's team has won the world champion title in the women's T20 cricket tournament.

No comments:

Post a Comment