Tuesday, 11 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 12.02.2025 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) அறிவுக்கும் தேர்வுக்கும் வித்தியாசம் உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடனுனான உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

2) உத்தரபிரதேசம், பிரக்யாராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் குடியரசுத் தலைவர் புனித நீராடினார்.

3) பிரான்ஸ்க்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

4) தமிழகம் முழுவதும் 2.69 கோடி மாணவர்கள் மற்றும் முப்பது வயதுக்குட்பட்ட பெண்களுக்குக் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

5) பெங்களூருவில் விமானக் கண்காட்சியைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

6) 2027க்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியா உருவாக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

7) பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கோ ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் இரண்டு பொருள் வாங்கினால் ஒன்று இலவசமாக வழங்கப்படும்.

8) மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியைத் துறந்தார்.

9) தமிழகத்தில் 38 ஆட்சிப் பணித் துறை அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

10) திருச்சி அருகே கம்பரசம்பேட்டையில் நவீன பறவைகள் பூங்காவைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

11) பிப்ரவரி 15 வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

English News

1) Prime Minister Narendra Modi has mentioned in his interaction with students that there is a difference between knowledge and examination.

2) The President took a holy dip at the ongoing Maha Kumbh Mela in Pragyaraj, Uttar Pradesh.

3) Prime Minister Narendra Modi, who is on a three-day official visit to France, was given a warm welcome.

4) Deworming tablets have been given to 2.69 crore students and women under the age of thirty across Tamil Nadu.

5) Defence Minister Rajnath Singh inaugurated the Airshow in Bengaluru.

6) India will be free from Filariasis by 2027, Health Minister J.P. Nadda said.

7) Buy two items, get one free at Co Optex stores in February and March.

8) Manipur Chief Minister Biren Singh has resigned from his post.

9) 38 civil service officers have been transferred in Tamil Nadu.

10) Deputy Chief Minister Udhayanidhi Stalin inaugurated a modern bird park at Kambarasampettai near Trichy.

11) The Meteorological Department has said that dry weather will prevail in Tamil Nadu till February 15.

No comments:

Post a Comment