Friday, 21 February 2025

தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’

தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’

தனுஷ் தமிழ்நாடறிந்த நல்ல நடிகர் மட்டுமல்ல, நாடறிந்த, உலகறிந்த நடிகரும் கூட. அப்படிப்பட்டவருக்குள் இருக்கும் இயக்குநர் கனவு அவரைத் தற்போது தொடர்ந்து படங்களை இயக்க வைக்கிறது.

அவரது இயக்குநர் அவதாரம் வெளிப்பட்ட முதல் படம் ‘பவர் பாண்டி’. அப்படத்தில் தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா இயக்கிய ராஜ்கிரணை மகனான தனுசும் இயக்கியிருப்பார்.

அவரது இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படம் ‘ராயன்’. இப்படத்தில் அவர் கதைநாயகனாகவும் நடித்திருந்தார். இப்படத்தில் அவரை இயக்கி அழகு பார்த்த அண்ணன் செல்வராகவனை இயக்கியிருப்பார்.

தற்போது அவரது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மூன்றாவது படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’ என்ற திரைப்படம்.

இத்திரைப்படத்தில் அவரது அக்கா மகன் பவிஷைக் கதை நாயகனாக்கி  இயக்கி இருக்கிறார்.

தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணிடம் தன்னுடைய முன்னாள் காதல் தோல்விகளைச் சொன்னால் என்னவாகும் என்கிற ஒற்றை வரியை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் தனுஷ்.

இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் போன்ற அனுபவமிக்க நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

*****

No comments:

Post a Comment