Thursday, 20 February 2025

பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ திரைப்படம்!

பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ திரைப்படம்!

பிரதீப் ரங்கநாதன் ஓர் இயக்குநர் மற்றும் நடிகர். ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ படத்தின் இயக்குநர் இவர்தான். அப்படத்தில் முச்சக்கர வாகன (ஆட்டோ) ஓட்டுநராகவும் நடித்திருப்பார்.

அதைத் தொடர்ந்து இவர் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

தற்போது பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியாகியிருக்கும் ‘டிராகன்’ திரைப்படம் இளைஞர்களின் நாடித்துடிப்பை எகிறச் செய்துள்ளது.

‘டிராகன்’ திரைப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இது இவரது இரண்டாம் படம். இவரது முதல் படம் ‘ஓ மை கடவுளே’. இத்திரைப்படம் பரவலான கவனத்தையும் நல்ல விமர்சனத்தையும் பெற்ற படமாகும்.

பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இணைவதால் ‘டிராகன்’ திரைப்படத்திற்குத் தனிக்கவனம் கிடைத்துள்ளது.

இத்திரைப்படத்தைச் சிறப்புக் காட்சியாகப் பார்வையிட்ட நடிகர் சிலம்பரசன் (சிம்பு / எஸ்டிஆர்) இத்திரைப்படமானது மிகப்பெரிய அதிரிபுதிரி வெற்றி (ப்ளக்பஸ்டர் ஹிட்) அடையும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘டிராகன்’ திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சயாடு லோஹர் ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின், கவுதம் மேனன், கேஎஸ் ரவிக்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

‘டிராகன்’ வெளியாகும் இந்நாளில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படமும் வெளியாகிறது.

*****

No comments:

Post a Comment