Tuesday, 4 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 05.02.2025 (புதன்)

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 05.02.2025 (புதன்)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) கல்வியில் முன்னேறிய மாநிலமாகத் தமிழகம் திகழ்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

2) ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்விக் கடனை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

3) தமிழக அமைச்சரவை பிப்ரவரி 10 இல் கூடுகிறது.

4) தமிழ்நாடு முழுவதும் காலைப் பொழுதில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.

5) சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானப் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது.

6) ஈரோடு கிழக்குத் தொகுதியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

7) தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைச் சுங்கச்சாவடிகளை 90 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

8) மகா கும்பமேளாவில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு 2.33 கோடி பேர் புனித நீராடினர்.

9) டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 87.29 ஆக வீழ்ச்சியடைந்தது.

10) ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்திய உற்பத்தித் துறை உயர்வு கண்டுள்ளது.

11) கனடாவிற்கு எதிரான வரி விதிப்பிலிருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பின்வாங்கினார்.

English News

1) Governor R.N. Ravi has said that Tamil Nadu is an advanced state in education.

2) The Tamil Nadu government has ordered to waive off education loans for SC and ST students.

3) The Tamil Nadu cabinet will meet on February 10.

4) There is heavy fog throughout Tamil Nadu in the morning.

5) Heavy fog in Chennai caused delays in air traffic.

6) Voting for the by-election is being held in the Erode East constituency today.

7) It has been decided to increase the number of highway toll plazas in Tamil Nadu to 90.

8) 2.33 crore people took holy dip on the occasion of Vasant Panchami at the Maha Kumbh Mela.

9) The value of the rupee against the dollar fell to 87.29.

10) The Indian manufacturing sector has seen an increase after six months.

11) US President Trump backed down from tariffs against Canada.

No comments:

Post a Comment